முதியோர் இல்லம்


நேற்று !

பெற்ற பிள்ளையை உச்சி முகர்ந்து ஆனந்தம் அடைந்தவள் உன் தாய் !!
உன்னை தன் மார்போடு அணைத்து பெருமை கொண்டவர் உன் தந்தை!


நிலவொளியில் கதை பல சொல்லி உனக்கு அமுதளித்தவள் !
நீ நடை பயிலும் போதும் , முதன்முதலாய் நடை வண்டி ஓட்டிய போதும் 
நீ விழாமல் உன்னை தாங்கிய கரங்கள் !!

நீ பேசும் மழலை வார்த்தைகள் கேட்டு கவிதை என மகிழ்ந்தவள் !
நீ நடக்கும் அழகை கண்டு கண்கொட்டாமல் ரசித்தவள் !!

இரவெல்லாம் உன் முகம் பார்த்தே விழித்திருப்பாள் உன் உடல்நிலையில் மாற்றம் வந்தால்
அன்பைக் கூடமௌனமாய் காட்டும் மென்மையானவர் - அப்பா!!

உன் விருப்பம் அறிந்து உனக்காக எதையும் செய்யும் கடவுளின் நகலான இரு ஜீவன்கள் !!

இன்று!

உனக்காக அனைத்தையும் தேடித்தேடிச் செய்த பெற்றோருக்கு நீ செய்தது என்ன?

உன்னை சுமந்தவளை சுமை என்று எண்ணினாயோ 
உனக்காக அலைந்து தேய்ந்த கால்களை இன்று கவனிக்க ஆளின்றி போனதே

உன் வீட்டில் உள்ள நாற்காலி எல்லாம் தேடுகிறதே உன் தந்தையை -
உன் இதயம் மட்டும் உயிரற்று போனதோ ?


சாய்ந்து கிடக்கும் நாற்காலியை கேள்
நிம்மதியாய் சுவாசித்த உன் தந்தையின் நினைவுகளை !!

சுவையாய் உனக்காக சமைத்தவளை இன்று எவனோ ஒருவனிடம்
ஒருவேளை சோற்றுக்காக கையேந்த விட்டாயே ? இது நியாயம் தானா?

உன் முகம் பார்த்தே உன்னோடு வளர்ந்தவர்கள் இன்று பாலைவனத்தில்-உறவுகள்
இருந்தும் தனித்து விடப்பட்ட                                                                                                       அகதிகளாய் !!

நீ உன் தந்தையின் கைபிடித்து நடந்த நாட்கள் மறந்தாயோ?
இன்று தள்ளாடும் வயதில் தனிமையை பரிசளித்ததேன்?

உன் வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் செடி எல்லாம் கேட்பாரின்றி காய்ந்தே போகும்
உம் தந்தையை நினைத்து ஏக்கத்தால் !!


மீசை பிடித்து தன் பெயரன் விளையாடவே வளர்த்த தாத்தாவின் மனம் புரியுமோ உனக்கு ?

உன் செல்ல மகளுக்கு ராமாயணம் , மகாபாரதம் சொல்ல ஒருத்தி இல்லையே என்று தோன்றவில்லையா இன்று.. !

பக்குவம் இன்றி நீ நடந்தாலும் உனக்கு பக்குவமாய் சமைத்து தருவாளே அவளின் சுவை மறந்து                                                                        போனாயோ !!

தவமிருந்தாலும் தாய் மடியில் உறங்கும் சுகமும்...உன் கண்ணீரை அவள் முந்தானையில் துடைக்கும் சுகம் போல் வருமா?

பேறு காலமோ...அதன் பின்னோ...செய்யும் முறை தன்னை உன்னவள் அறிவாளோ ?
உன் பூமகள் பூப்பெய்தி நின்றாலும் செய்யும் செய்முறைகள் யாரை கேட்டு செய்வாயோ?



உன் வீட்டுச் சமையல் அறையில் அஞ்சரை பெட்டியிலும் சக்கரை டப்பாவிலும் தேடி பார்
உன்னை பெற்றவளின் சிறவாட்டு சேமிப்பு தெரியும்...அதுவும் உனக்காக !!

வம்சம் பல நீ கண்டாலும் நீ தொடங்கியது உன் தாயின் கருவறையில் தான்!!
நில்லாது சுழலும் உலகில்-நீயும் மூப்பு எய்துவாய் என்று மறந்து போனாயோ?

உன் கையில் சுற்றி உள்ள வண்ண கயிர்களை கேள் அதில் உள்ள ஈரம் எல்லாம் உன்னை பெற்றவளின் கண்ணீறன்ரோ ?
பூஜை அறையெல்லாம் வீசும் அவள் வாசம் - தெய்வங்கள் எல்லாம் தினமும் தேடும் ! !

நோய் பட்டால் உறங்காது உன்னை பார்த்துக்கொண்ட உன் உயிரின் விதைகளை
கவனிக்க இன்று (நீயின்றி) நீரின்றி தனியாய் எங்கோ விட்டாயே!!


தனிமையிலும் அவர்கள் எண்ணமெல்லாம் உன்னை எண்ணி - உன்
மகன் உன்னை இவ்விடம் விடக்கூடாதென்று !!

அவர்கள் உணர்விற்கு கொள்ளியிட்டு அவர்கள் உடலை பாதுகாக்க மாதம் கூலி தந்து
நீ அவர்களை அனுப்பிய இடம் சிறைச்சாலை!!

உறவுகள் ஆயிரமிருக்க உரிமை உனக்கு மட்டுமே!!
முதுமையில் உன் தந்தை உன் மகனாவான் உன் தாய் உன் மகளாவாள் !!

உனக்காக சிறந்ததொரு பள்ளிக்கூடம் தேடி அலைந்த உயிருக்கு கடைசி கால வாழ்விற்கு சிறந்ததொரு
"முதியோர் இல்லம்" தேடி அலையாதே - உனக்கும் இந்நிலை வரலாம் ! !

இருக்கும் போது விட்டுவிட்டு போன பிறகு அவளது புடவையிலும் தந்தையின் சட்டையிலும் தேடி என்ன பயன்?
உன்னை பெற்றவள் உன் இல்லதிலும்,உள்ளத்திலும் வாழட்டும்!!


"யாரும் இவ்வுலகில் லட்சோபலக்ஷம் காலம் வாழ போவதில்லை.
வாழும் காலம் யாவும் நம்மை பெற்ற ஜீவன்களை அரவணைத்து அன்பு காட்டி வாழ முயற்சிப்போம் ! !
உலகில் முதியோர் இல்லம் இல்லா ஒரு நிலை வேண்டும்!
! "


-அஜய் ரிஹான்

கருத்துகள்