என் கவிதைகளின் முதல் வரி நீயாக இருக்க மாட்டாயோ என்று
ஒவ்வொரு முறையும் என் பேனா முனை ஏங்கித் தவிப்பது
அறிவாயோ என் கண்மணி !!
கவிதையின் முடிவில் வெள்ளை காகிதமெல்லாம் உன்
முகமாய் மாற கவிஞனும் ஓவியன் ஆனது என்ன விந்தையோ ?
உனக்காக - என்னுள் பாயும் வார்தைகள் கொஞ்சம்
அனுப்பி வைப்பேன் கேளாயோ என் கண்மணி !!
உன் அழகை மட்டும் ரசித்திருந்தால் என்றோ கவிதைகள்
என்னை வஞ்சித்திருக்கும் - இன்று எல்லா கவியிலும்
உன் வாசம் !!
தினமும் என்னை கொள்ளை கொள்ளும் உன் விழி - கொலைகளில்
என்றும் உடன்பாடில்லை - கொல்வது நீயென்றால்
மட்டும் விதி விலக்கு அளிக்கிறேன் உனக்காக!!
காற்றில் அலையும் உன் கூந்தல் மேகம் என்னை சுற்றி
பல கவிதை கூறும், உன்னிடம் சொல்ல தினம் என் இதயம்
ஏங்கும் - உனக்கும் கொஞ்சம் கவிதையால் தாலாட்டு பாட
ஆசைதான் எனக்கும் - சேயாக என் மடியில் நீ!!
இன்று காணும் உன் புன்னகை போலே அறுபதிலும் என்னை
மயங்கச் செய்வாய் - தள்ளாத வயதிலும் இன்று போல் அன்றும்
உன் விழிகள் என்னை தாக்க வாராயோ என் கண்மணி
நீ அழகாய் சொல்லும் பொய்கள் கூட உன்னை போல் அழகு
நீளும் இரவும், என்னை வாட்டும் பகலும் - உன்னை சுற்றி
முடிகிறது என் நாளின் நீளம் - உன் விரல்கள் கோர்த்து சில
தூரம் நடந்து ஒற்றை நிழலில் முடியாதோ நம் பயணம் !!
என்னென்ன மாயம் செய்தாய் - என்னுள் சில மாற்றம் நெய்தாய்
இரவெல்லாம் வெப்பம் ஆக, பகலில் நான் உன்னைத் தேட !!
உனக்கும் எனக்குமான இடைவெளியில் நான் உணர்கிறேன் ஒரு
புதிய பிரபஞ்சத்தை, அங்கே நம் மூச்சுக் காற்றில் உயிர் வாழும்
பூக்களும் நட்சத்திரமும் - உனக்கும் என்னக்குமான புவி ஈர்ப்பு விசையில்!!
ஆதியும் அந்தமும் நாம் ஆவோம் - எல்லையில்லா கடலை போலே!
உன் பாத சுவடின் அச்செடுத்து ஓவியங்கள் பல செய்திடுவேன் - உன்
புன்னகை எல்லாம் அழகாய் கோர்த்து நிலவுக்கு பரிசளிப்பேன்!!
காதலில் நேரங்கள் கூடாதடி - இரவும் பகலும் கடந்துன்னை ரசித்திடுவேன்
அளவில்லா நேசம் உனக்காக - ஏற்றுக் கொள்வாயோ என் கண்மணி ?
தினமும் என் காதலை சொல்ல ஆசைதான் - மறைத்து வைக்கிறேன்
மர்மமாய் அல்ல மௌனமாய் !!
மறுஜென்மத்தில் நம்பிக்கை இல்லை எனக்கு - வாழும் போது தொலைத்து விட்டு எங்கே தேடுவேன் உன்னை மறுமுறை - மறுக்காமல் தருகிறேன் என்னை உன்னிடம் !!
என்னோடு நீயும், உன்னோடு நானும் - நாளை நம்மோடு நம் காதலும் !!
வாழ்வதும் வீழ்வதும் ஒரு முறை - உனக்காக வாழ்ந்தும்
உன் அன்பில் வீழ்ந்தும் - எனக்கான அடையாளம் ஒன்றை
தருவாயோ என் கண்மணி !!
என் வாழ்வும் என் இதயம் சொல்லும் வார்த்தையும் உனக்காக மட்டுமே என் கண்மணி !!
Some thing that attracted me from the video - Watch it out - Just for you!!!
-அஜய் ரிஹான்
அவளே கருப்பொருள்
உன்னுள் இரங்கி
ஊமையாய் உறங்கி
உரிய சமயத்தில்
முகம் காட்டுவாள்..
கலையாய்,
கதையாய்,
கவிதையாய்..
காதலாய்...
ஏன் கடவுளாய்...