" உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது " - திருவள்ளுவர்
புணர்தலின் ஊடல் இனிது " - திருவள்ளுவர்
தேடித் திரிக இன்பம் - இதுவென்றுணர்ந்தபின் ஊடல்
கொள்க - அதுவும் மேலோங்கி நின்றபின் கூடல்
கொள்க - தேகம் கொல்லாது புணர்தலும் - கூடிக்
கழிந்த பின் கட்டியணைத்து அணைத்து விடுக காமம் !
கூடிக் கொணர்க இன்பம் - ஒரு மையப் புள்ளியில்
தேடலும் கொள்க - இரவில் மிளிரும் வெட்கம்
அழகு அதை ரசிக்கவும் செய்க - இடையின் அருகே கொஞ்சம்
கவிதையும் சொல்க வளைவுகள் நாணம் கொள்ள !
ஆயிரம் இரவுகள் கண்ட கனவெல்லாம் ஒற்றை இரவில்
களவு போகாது கவனம் கொள்க - காடல்ல இது
வேட்டையாட நீயும் மிருகமல்ல - வேட்கை தீர
உணர்வோடு உடல் பயிலும் தேவ இலக்கிய பாடங்கள் !
தொடக்கமே மேய்ச்சல் கொள்வாயென்றால் அவள் மேனியே
காய்ச்சல் கண்டு போகாதோ கவனம் கொள்க - கொஞ்சம்
கதைகள் சொல்வாய் - ஆசைகள் கேட்டறிவாய் -பின்னே
தொடுதலும் வெட்கம் தரும் - தொடங்கி வைக்கும் முதல் முத்தம் !
கொஞ்சம் விரல் தீண்டி கூச்சம் தருவாய் - யாரும் காணா
அவளது நாணத்திற்கு விடுதலை தருவாய் - நீயும் தரு
வாய் என ஏங்கித் தவித்து அவள் விட்ட பெரு மூச்சின்
அறையெங்கும் பரவிக்கிடக்க - பின்னிருந்து கட்டியணைத்து குறைப்பாயோ !
தன்னவன் தன்னை தழுவிக் கொள்கையில் தன்னை மறந்து
கிடப்பாளோ - என் கனவுகளையும் நீ தாங்கிக் கொள்ள
மாட்டாயோ என ஒரு பார்வை அவள் பார்க்க - ரசிகனாய்
நீயிருந்தால் அந்த பார்வையில் ஒரு நொடி மயங்கிப் போவாய் !
இமைகள் இமைக்க அவளெண்ணமறிந்து தொடர்
வாயோ - வெளிச்சம் உறங்கும் நேரம் இதுவென்று
இருளை வரவேற்று ஒளியை உறங்க சொல்வாயோ
ஏற்ற காலம் தவறாது அரங்கேறும் காம லீலா வினோதம் !
அவளே உன் அணிகலன் என்றானபின் அவளை தீண்டும்
அணிகலன்கள் எதற்கு ஓய்வு கொடு - ஆடை களைவதில்
சிரமம் என்றால் யோசிக்காமல் உதவிடு - நிசப்தமான
நிலையில் முதலில் விழிகள் மூடி இதழ்கள் கூடல் கொள்ளட்டும் !
மீதம் சொல்லவோ எனக்கனுமதியில்லை - போதுமென்னும்
நிலை வரை பூக்களம் போர்க்களமாகட்டும் - அவ்வப்போது
இடைவெளி வேண்டுமென்றால் தயங்காது தந்திடு - வலிகள்
இன்பமாகும் - மிருகம் வெளிப்படாது கடிவாளம் கொள்க போர்க்களத்தில்
உச்சமே இலக்கு என்றால் மிச்சம் பயில்வது எப்போது
உன் இச்சை தீர்ந்த பின்னே விலகலும் வலி தான்
கொஞ்சம் உன் தோள் சாய்த்து தலை கோதி - காயாத
இதழ் முத்தம் நெற்றியிலொன்று தருவாயோ அவள் கேளாது !
சாத்திரங்கள் சொன்னபடி சத்தில்லாமல் நிகழ்ந்தேறியது
கூடிக் கழிந்த பின் அவள் பார்க்கும் பார்வை - நீ
அறிவாய் அவள் இமைகளும் முத்தமிடுமென்று
சட்டென்று விடுதலை வரம் வாங்கிச் செல்வாள் !
குளியல் கொள்வானோ என ஏங்கி உருகும் அவளை
எதிர்பாராது பின்னிருந்து அணைப்பாயோ அவள் குளிர
செல்லமாய் குறும்புகள் அவள் செய்ய - முத்தம் நீ பரிசளிக்க !
பகலெல்லாம் கடந்து இரவு மட்டும் அவளை ஞாபகப்படுத்துமோ
உன் காமம் - அவள் உடலுக்கும் உணர்வுண்டு - உன் இச்சை தீர்க்கும்
இயந்திரமோ - அவள் மஞ்சள் கயிற்றால் மஞ்சத்தில் கட்டுண்டு கிடக்க !!
புணர்தலுக்கும் புரிதல் தேவை அறிந்து கொள் - மனதை கொள்ளை கொள் !!
காதல் போல காமம் உணர்வன்றோ - உள்ளக்
கூடல் கடந்த பின்னே மாயக் கூடுகள் கூடி
இன்பம் காணும் - கடிகாரங்கள் தேவையில்லை
நேரங்கள் கடந்து அன்பை செலுத்து - அன்பும் இன்பமாகும் !
கலவியும் கல்வியில் கூடட்டும் - கேட்டறியா
விஷயங்கள் விஷமாகாது வளரட்டும் - ஒழுக்கம்
விதையானால் விலை மாந்தருக்கு வேலையில்லை
பூமியில் பூமகள்கள் ஆனந்தமாய் வீதியில் உலவட்டும் !
காமம் கொடிதென்று புகட்டாது - கேள்விக்
குறிகள் விடையறிந்து கொள்ளட்டும் - இனிவரும்
தலைமுறையேனும் தலை நிமிர்ந்து வாழட்டும்
இனியேனும் நிகழாது இருக்குமோ கொடுமைகள் - என் நாட்டில் !
- அஜய் ரிஹான்
கருத்துகள்
கருத்துரையிடுக