To my beloved father, Wishing you a "Happy Birthday"-Have along prosperous life with happiness!!
என் சிறு விரல் பிடித்து நீ தொட்ட ஸ்பரிசம் !
அப்போது நான் அறியேன் என் நடை பயணம் தொடங்கியது அங்கென்று!!
உந்தன் மார்பில் என்னை அணைத்துக்கொள்வாயே-அங்கே
நான் உணர்ந்தேன் தந்தை மார்பிலும் ஒரு கருவறைஉண்டெண்று!!
கடைவிதீ செல்லும் போதெல்லாம் உன் கை விரல் பிடித்தே நடந்திடுவேன்!
சிறு சிறு பொருள் கேட்டு கை,கால் உதறி அழுதிடுவேன்-அங்கே
நீயும் செல்லமாய் கண்டித்து அதை எனதாக்கி மகிழ்ந்திடுவாய்!!
பள்ளி செல்லும் வயதில் நீ என்னை கூட்டிச்செல்ல வருவாய்-வண்டியின்
ஓசை கேட்டு தூள்ளிக்குதித்திடுவேன் உன்னை காணும் ஆவலில்!!
எனதாசை அணைத்தும் நீ அறிவாய்-
நீ பேசாத மௌனம் கூறும் அர்த்தம் யாவும் நீ சொல்லாமலே நானறிவேன்!!
நீ சிந்தும் வியர்வை யாவும்-என்
உடம்பில் ஓடும் தாய் பாலின் மீதம் அதுவன்றோ?!!!
நான் பெற்ற அறிவணைத்தும் நீ பேச நான் கேட்டறிந்ததே
நன்மை தீமை யாவும் உன்னைத்தாண்டி என்னை சேரும்!!
எனக்கேதும் ஆனால் உன்னை அறியாம் தவித்திடுவாய்-அதை
யாரும் அறியாமல் உன்னுள்ளே மறைத்திடுவாய்!!
துன்பம் இதுவென்று என் நிழல் கூட அறிந்ததில்லை-நிஐமாய்
என் அருகில் நீ இருப்பதனால்!!
உன் புன்னகை ஒன்றே போதும்-புயலயும்
புக்களாய் கோர்த்திடுவேன்!!
காலம் யாவும் நீ வேண்டும் எனக்கு-வாழ்வின் பொருளாய்!!!
எம் தந்தை-என் பொக்கிஷம்!!!
-Ajay Ryhan
“No love is greater than that of a father for His son.”
― Dan Brown, Angels & Demons
கருத்துகள்
கருத்துரையிடுக