முதல் கனவு பெண்


காதலில் விழுந்த அந்த ஒற்றை நொடி 🕓

என் இதயம் கண்ட பிம்பம் உன் முகம்!👰

விழி மயங்கி வார்த்தைகள் மெல்ல தயங்கி

என் ஜீவன் மட்டும் உன்னை சுற்றுதே 👤

நீ பார்க்கும் ஒவ்வொரு நொடியும் ஆயிரம் முறை மின்னலும்,

கோடி முறை புயலும் கடந்து செல்லுதே🏊
நிஜத்தை மட்டும் என்னுடன் வைத்து

என் நிழல் என்னும் ஆண்மையை உன் பெண்மைக்கு அரணாய் அனுப்பி வைத்தேன்👐
-உன்னுடன்
போகும் பாதையில் இன்ப துன்பம் எல்லாம் புயலாய் கடந்தவன் !

உன்னை பார்த்தவுடன் வலுவிழந்து காதல் கரையை கடந்து போகிறேன் சேதம் இல்லாமல்!!⛳
 
தினமும் முகம் பார்க்கும் கண்ணாடியில் உன் முகம் தேடி தேடி இருவரும் வாடி போனோம்-நானும் கண்ணாடியும்😐


நான் கேட்டு, படித்த தேவதை கதை எல்லாம் உன் உருவம் கொண்டு உலா போகும் அதிசயம் என்னில்!!👩

உன்னை என்னுள் தேடவா? உனக்காக தவழும் என் வார்த்தைகளில் தேடவா?

காற்றில் மிதக்கும் இசையில் 🎶 உன் குரல் தேடவா?

தேடி தேடி அயர்ந்து விட்டேன் ஆனால் இன்னும் அதிசயிக்கிறேன் என் கனவில் வந்த உன்னை எண்ணி!!!
-அஜய் ரிஹான்

கருத்துகள்