இமையும் இதயமும்



உன் சிறு சிறு பார்வை தீண்டி காயம் ஆனது என் இதயம்...!
உன்னிடம் பேசும் போது என் வார்த்தைகள் தவழும் அழகை ரசிக்கிறேன் உன்னால்...!!

பாதியில் கலைந்த கனவா நீ?!
இல்லை
எனை களவாடி செல்லும் நிஜமா நீ..?!!

மதி மயங்கும் மாலையிலும் ,
கண் விழிக்கும் காலையிலும் என் சூரிய சந்திரன் நீ தானே!!.

உன்னை பற்றி சொல்ல வார்த்தைகள் வற்றி போனதே..!


காற்றில்லாத மேகம் போல் நீ  இல்லாமல் நான்-நான் ஆவது எப்படி?



பொருள் அற்ற வாழ்கையில் இருள் மூடி செல்லாதே....!
இமை மூடும் வேளையிலும் என் விழிகள் காணும் கவிதை நீயே...!!
என் கவிதைக்கு உயிர் கொடுப்பாயா..? வார்த்தையாக...!!
-அஜய் ரிஹான்

கருத்துகள்