நான் போற்றும் தாய்மை



கருவறை விட்டு உந்தன் முகம் காண வந்தேன்
புதிதாய் ஒரு குரல் கேட்டது எந்தன் காதில்-தாயின் சிரிப்பொலி !!
உந்தன் உள்ளங்கையில் நான் உணர்ந்தேன் ஒரு அரவணைப்பு
அது என்னை தாங்கும் ஒரு அரண் அமைப்பு !!

உன் நெற்றி பொட்டில் நீ வைத்திருக்கும் குங்குமம் மேலும் சிவந்திட
நீ பட்ட வலிக்கும் உன் தாய்மையின் பரிசாக எம்-
தந்தை தந்த இதழ் முத்தம் கண்டேன்!!
என் அழுகுரல் கேட்டு நீ  துயில் எழுவாய்-நான்
எதற்கு அழுகிறேன் என்று நீ மட்டுமே அறிவாய்!!

உன் மார்பினில் சுரக்கும் என் உணவனைத்தும் உன் உதிரம் என்று நான் அறிகிலேன் அப்போது!
என் கண்ணீர் மட்டுமே பரிசாகும் அதற்கு இப்பொது!!


தவழும் வேளையில் என்னுடன் நீயும் மறுமுறை தவழ்ந்து பழகிடுவாய்
என் முதல் நடை கண்டு பெருமை கொள்வாய்!!
யார் சொல்லி வந்தது என் முதல் வார்த்தை அம்மா என்று-அது
என்னை படைக்கும் போதே என் நாவில் பிரம்மன் எழுதிய வார்த்தை அது!!


சிறு சிறு தவறுகள் செய்திடுவேன்,செல்லமாய் நீயும் கண்டிப்பாய்
எனக்கு தெரியாமல் நீ அதை ரசித்த அழகை, நான் உனக்கு அறியாமல் ரசித்ததுண்டு !!


பாடம் பயிலும் வயதில் என் முதல் ஆசான் நீ ஆவாய்!!
அறிவு அனைத்தும் அன்பால் அமுதளிக்கும் என் தாய் ஆவாய்!!
உன் கரம் கொண்டு உணவு உண்ணும் சுகம் வரம் எனக்கு!!


நான் உண்ணும் அழகை கண்டு நீ அகம் குளிர்வாய்!!

உன் சேலை நுனியில் தலை துவட்டி மகிழ்வாயே-நானும்
அதை தான் குளியல் முடித்து தேடி வருவேனே!!


என்ன வயதானாலும் உனக்கு நான் சிறு பிள்ளை தானே-அதனால்
தான் உன் தாய் மடி தேடி வந்தேனே!!

உன் சிரிப்பொன்று போதும் எனக்கு பல காலம் வாழவே !
வரத்தை இல்லை என்னிடம் உன்னை வாழ்த்தவே!!
நிஜமாய்  நீ இருக்கும் போதே உன்னை உணர்கிறேன்-நீ
என் நிழலானால்  உன் நினைவுகள் மட்டும் தானே என்                       சொந்தம்!!!    


 உலகம் யாருக்கும் என்றைக்கும் சொந்தம் இல்லை
  அதையும் செய்திடலாம்-என் அருகில் நீ இருந்தால்!!!                                                  

இருக்கும் போதே அம்மாவை மதிப்போம்!! இறந்த பிறகு புகைபடத்தில் தேடாதே உன் தாயின் அன்பை


                                                                                                                      -அஜய் ரிஹான்



கருத்துகள்

கருத்துரையிடுக