என் கவிதையின் முதல் எழுத்து நீ !
நீயும் நானும் சேர்ந்தே அதன் பொருள் ஆவோம்!!
என் கவிதையில் வரும் ஆச்சர்ய குறியெல்லாம் உன் புருவம் தானோ??
மெல்லினம் உனது முகமே !
இடையினம் பேசும் உனது இடையோ?!!!
வல்லினம் சொல்லும் நினது வதனமே!!
உயிர் மெய் போல் நீயும் நானும்!
அன்பில் தொடங்கி அன்பிலே முடிப்போம்!!!
உயிரை உயிரால் கலக்கும் இல்லகனம் படிப்போம்!
மயக்கம் வரும் பொழுதினிலே தமிழ் மொழி போல் இன்பம் காண்போம்!!
சொல்லாத செயல் யாவும் செய்யுளில் சொல்வோம்-மீதம்
கட்டில் அறையில் கட்டுரை வரைவோம்!!
உன் கண்ணை கண்டால் கவி பாடும் கவிஞனும் காற்றாய் மாறி போகட்டும்!
உன் குரல் கேட்டால் குயிலும் தன் தாய் மொழி மறக்கட்டும்!!
தமிழ் சொற்கள் அடைத்து ஒரு தலையணை செய்வேன்-உன் காதோரம் எப்பொழுதும் இசை பாட!!
கவிதையாக நீ வேண்டும் அதில் தமிழ் ஆக நான் வேண்டும் தமிழும் காதலும் வேறு இல்லை-நம்மை போல்!!!
#தமிழ் மொழி தோன்றிய காலத்தே காதலும் முளைத்து விட்டது!!!

-அஜய் ரிஹான்
கருத்துகள்
கருத்துரையிடுக