நீ தானே என் பொன்வசந்தம்


தேகம் எரியும் உன் இரு கண் விழி பார்வையினால்...!
உன் இதழ் ஓரம் சிந்தும் ஒரு புன்னகைகாக ஆண்டுகள் கோடி தவம் இருந்தேன்...!!
இமைக்காமல் உன்னை பார்க்க என் விழிகளும் தூக்கம் தொலைத்து போனதே...!
நீ  சுவாசம் உள்வாங்கும் போது பூமியே காற்றின்றி போனதே..!!
நீ வெளிவிடும் சுவாசக்காற்றில் பூச்செடிகளும் உயிர் வாழுதே..!
நீ வைத்து தூக்கி போட்ட பொட்டுகள் கூட வானில் நட்சத்திரமாய் ஆனதே...!!
வண்டுகள் கூட உன்னை சுற்றி அலைவது ஏனோ? நீயும் பூவென்பதாலா....?!!
கரணம் இல்லாமல் கரைந்தே போகிறேன் உன்னுள்..!
இருளில் தேடும் நிழல் போல்...ஒளியாய் உன்னை தேடுகிறேன்...!!
உன்னை காணமல் தேய்வது நிலவு மட்டும் அல்ல நானும் தான்...!!!
-அஜய் ரிஹான்

கருத்துகள்