எனக்கான தேடல்


நீ என்னை பார்க்கையில் நான் நீரின்றி தவழும் மீனாக வேண்டும் உன் இரு விழி பார்வையில்...!
என் இதயத்தில் நீ சாயும் போது உன் இதய துடிப்பில் என் இதயம் துடித்திட வேண்டும்...!




உன்னை என் மனதில் சுமப்பதினால் நானும் உன் தாயாகிறேன்...!



உன் மடியில் தவழும் போது நானே உன்னிடம் சேய் ஆகிறேன் ...!




 என் தோளில் நீ சாயும் போது உன் தோழன் ஆவேன்..!
 உன் கண்ணோடு கலந்ததால் உன் கணவன் ஆவேன்...!
நாம் கொண்ட உடலுக்கு வயதாகலாம்..,நாம் காதலுக்கு அல்ல..!
இந்த உலகம் விட்டு நீ  போகும் போது நானே உன் கல்லறையில் பூக்கும் மலராவேன்..!

என் உயிர் கொண்ட தேடல் நீ தானே. !!!
-அஜய் ரிஹான்  

கருத்துகள்