திரௌபதி


" யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத|
அப்யுத்தான மதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்|| "


என் கண்ணீர் மையால் எழுத துவங்குகிறேன் !!


இரு கைகள் இணைந்து கதை பேசி மகிழ்ந்த தருணம்!

பார்த்த படம் பற்றி உன் தோழனோடு சிறு குழந்தையென நீ விமர்சித்து மகிழ்ந்த வேளை !!
நடக்க போகும் விபரீதம் அறிந்து,வெளிச்சம் கூட இருள் போர்வை போர்த்தி ஒளிந்துக் கொண்ட வேளை !
உன் நிழலும் உன்னை தயங்கித் தயங்கி தொடர்ந்து வந்த காரணம் அறிவாயோ நீ !!
இரவில் -
காமம் கொண்ட மிருகம் சில மனித உருவம் கொண்டு மண்ணில் புசிக்க உடல் தேடி அலையும் வேளை !


எமனும் - பாவி

உன் உயிரை கவர்ந்துச் செல்ல பேருந்து வேடம் பூண்டு வந்தானோ?-
மாரீசன் போலே !!

அம்மிருகங்களின் இறை-நீயென்று அறியாமல் எமனின் பாவக்கயிற்றால் கட்டுண்டு போனாயோ ??


நீ போகும் திசை விதியால் மாறி-

மிருகங்களின் காமப் பித்தம் தலைக்கேறி உன்னை வேட்டையாடும் பொழுது- சந்திர சூரிய கிரகணமோ ??
உன்னைக் காப்பாற்ற-
உன் தோழனின் தோழ்கள் யாவும்  திறனுள்ள வரை வீரம் காட்டி மயங்கி வீழ்ந்தே போனது !!

மனித மிருகம் யாவும் உன்னை புசித்தெறிய - உன் 
வலியும் வேதனையும் கண்டு மனமிறங்கா தெய்வம் பல உண்டு இவ்வுலகில்!!
திரௌபதியின் மானம் காத்த (மாயக்)கண்ணணும்- இன்று
மாயமாய் மறைந்தே போனானே !!

நீ வேண்டிய தெய்வம் யாவும் மௌனமாய் உறங்கிப் போனதேனோ-
கல்லாய் இருப்பதனாலா??


வேட்டையாடி மகிழ்ந்த அம்மிருகங்களில் ஒருவன் கூட -ஒரு
 தாய் வயிற்றில் பிறந்தவனில்லை!!


வீதியில் உன்னை பிறந்த குழந்தையென எறிந்தவனை-உன்
சிறு பார்வையால் எரித்துப் பொசுக்கிடும் ஷக்தி தரவில்லையா "பராசக்தி"


கண்ணகியின் வம்சம் நீயன்றோ-
கயவனால் கரைந்த மானம் பெரிதென்றெண்ணி நீயும் காற்றோடு கலந்தே போனாயோ?


உன்னைப் பெற்றளின் கனவிலும்,கண்ணிரிலும் தீ மூட்டிச் சென்றானே-
அவன் மரணம் இதுவென்றுணர்ந்து-அதனை யாசித்துப் பெற்றிட வேண்டும்
அதுவரை அவன் உடல் காணத துன்பம் யாவும் பெற்றுத் துடித்திட வேண்டும் !!


மரணமென்பது உனக்கல்லை இவ்வுலகில் !!நீ நிகழ் கால பெண்களின் மானம் காக்கப் பிறந்திட்ட "திரௌபதி "


இனியொரு பெண்ணிற்கும் இத்தகைய கொடுமை நடைபெற அனுமதியோம்!!


ஆண்மை என்பது பெண்ணின் நிழலாக வேண்டும்- காவலாய் !காமமாய் அல்ல !!


இனியொரு விதி செய்வோம் - அதை
எந்த நாளுங் காப்போம்
தனி யொருவனுக் குணவில்லை (தனி யொரு பெண்ணுக்  பாதுகாப்பில்லை) எனில்
ஜகத்தினை அழித் திடுவோம் -பாரதியார்


 -அஜய் ரிஹான்



கருத்துகள்

  1. Ithu pondra pathivugalai padithenum unarattum pen enbaval verum sadhai alla yendru...

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. Mayakannan maayamai poonano?!! Cha, what beautiful lines Ajay. I'm so proud of you to have taken such a bold topic and the flow of the message and the content is amazing. The best one I've ever read. Just keep writing, giving your thoughts wings and just keep flying. Proud of you as always!!

    பதிலளிநீக்கு
  5. Saga Varthaigale illai unai paratta..Iravu perundhil kooda ichai thedum kootam..as you said..Anmai enbadhu..penmayai potra, padhukaka..unakum un sindhanaikum Thalai vanangugiren Saga. nee Vazhga valarga pallandu.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக