கண்ணுக்குள் நிலவு



அழகான கனவு ஒன்று !!
துயில் கலையா அந்நேரம்- என்
சிந்தனையில் கருவாகி கற்பனையில் உருவாகி ஒரு நொடி உயிர் பெற்று நின்றாயே என் மகளே !!

கோடி அணுக்கள் கடலென ஒன்றினைந்து,ஓராயிரம் நட்சத்திரம் உயிரளித்து ஓரு நிலவென கருவான என் மகளே !!



என் கண்கள் காணாத அதிசயம் நீயன்றோ!!-நீ
வரும் முன்னே உன்னை எண்ணி பல நூறு ஓவியம் தீட்டி வைத்தேன்-பாவம் படைத்த பிரம்மனே மதிமயங்கிய அதிசயம் நானறியேன்!

என் கற்பனைச் சிறகை பறக்க விட்டேன்-உன்னை
ஓவியம் என்றேன்,
ஓவியத்தின் வண்ணமென்றேன்,
வானவில் என்றேன்,
காற்றில் மிதக்கும் வெண் மேகமென்றேன்,
என்னையுமறந்து இதுவரை நான் கண்டறியா தேவதை நீயென்றேன்!!


மகளே!! உனக்கான பெயரைத் தேடி சங்கத் தமிழ் முதல் தமிழ் மொழிக்கடலின் ஆழம் வரை சென்று முத்தமிழும் முத்தமிட்டுத் தந்த பெயரை உன் காதோரம்  சொல்லி மகிழ்வேனே !!


காவியங்கள் பல செய்து அதை உனக்கென சேர்த்து-தமிழ் நூலாடை செய்வேனே நீ உடுத்த!!

நீ சுவாசிக்கும் காற்றைக் கூட என் உயிர் கெண்டு சோதித்த பின்னே உனை தீண்ட அனுமதிப்பேன் –உன்னை
என் மார் மீது போட்டு என் இதயத்துடிப்பை தாலாட்டுப் பாட செய்திடுவேன்!!


தினமும் உன் பிஞ்சு பாதம் தொட்டு மகிழ்வேன்-என்
பாதம் மீது உன் பாதம் வைத்து இருவரும் நடை பயில்வோம் புதிதாய் !

கள்ளமல்லா உன் சிரிப்பை தினம் ரசிப்பேன்-ரசிகனாய்
உன் மழலை மொழியும்,ரீங்கார அழுகையும் நான் முதல் முதலாய் நான் கேட்கும் பைரவி,கீரவாணி ராகங்கள்!!


உனக்காக கதைகள் பல படித்து வைப்பேன் என் செல்ல மகேளே நீ உறங்க!
உன்னைப் போலே பொம்மைகள் பல வாங்கி வைப்பேன்-பொம்மைகள் உன்னுடன் விளையாடி மகிழ!

என் முதுகின் மேலே பஞ்சனை போட்டு வைப்பேன்-என்
தெய்வ மகள் யானை சவாரி செய்து சிரித்திடவே!


உன் இதழ் உதிர்க்கும் முதல் வார்த்தை "அப்பா" என்று கேட்டிட பேராசை கொண்டேன் - என்னை 
நீ "அம்மா" என்றழைத்தாழும் சுகமே-இரண்டிழும் அர்த்தம் வேறில்லை!!


உன்னை அரவனைத்து (அரண் அமைத்து) பாதுகாப்பேன்-தாயுமானவனாய்!!
என் மகளே!! செல்லமே என கொஞ்சிக் கொஞ்சி பேரானந்தம் அடைந்தேனே!!

துயில் கலையா கனவொன்று வேண்டும்-மண்ணில் நான் வாழ சொரக்கமாய் நீ வேண்டும் என் மகளே!!
தந்தை என் கண்ணத்தில் ஒரு முத்தமிடு-என் வாழ்வின் பொருளாய் வந்துவிடு என் தேவதையே!!

"சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா 
செல்வக் களஞ்சியமே!
என்னைக்  கலிதீர்த்தே உலகில் 
ஏற்றம் புரிய வந்தாய்!

உச்சிதனை முகந்தால்  - கருவம் 
ஓங்கி வளருதடி 
மெச்சி யுனை யூரார்- புகழ்ந்தால் 
மேனி சிலிர்க்குதடீ. "


 -அஜய் ரிஹான்




கருத்துகள்

  1. This is absolutely awesome Ajay... I'm facinated with the maturity you have and to have used such lovey words to describe the love of the father-daughter relationship... I could feel the love of an expectant father towards his unborn baby girl and this is just amazing!! Way to go AJ. Hats off!!

    பதிலளிநீக்கு
  2. OMG....So beautifully written and described.....It brings my father into my thoughts giving me goosebumps! I wonder if my father loves me this way and I yearn for it....wonderfully said... Well said.... Hats off to u !!!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக