சித்ராங்கதா

முற்றுப்புள்ளி இல்லா நம் காதலின் முதல் எழுத்து நீயென்று

பேனா முனையில் முத்தமிட்டு முதன்முதலாய் நான் எழுதும் முதல் பெயர் "சித்ராங்கதா"


 ஏதேதோ எழுத எண்ணி இறுதியில்
கவிதையின் வரமாய் வந்தவள் நீ!!

பரவிக் கிடக்கும் காற்றோடு அங்கங்கே உன்னை சுற்றி
அலையும் எந்தன் ஏக்கங்களை அடையாளம் காண்பாயோ?

(வி)சித்திரமான பெண்ணே!! உன்னை வரைந்த தூரிகைத் தேடிஅலைந்திடுவேன்!
இன்னொரு பெண்னொருத்தி உன்னைப் போல் வேண்டாம் இவ்வுலகில்!!!

நீயும் நானும்
மழையில் இருவரும் ஒன்றாய் நனைவோம்
மழைத்துளி நுழைய இடமில்லாமல்-நெருக்கமாய்!!!

உன்னை நிலவென நினைத்து நினைத்து நிலவின் உருவம் மறந்தே போனேன்!!

பேச ஏதும் இல்லாத போதும் ஏதேதோ பேசி சிரித்திடுவாய்
கண்களால் ஏதோ செய்கிறாய்-என்னை உன்னில் பிரிக்க முடியா ஈர்ப்புவிசை!!

என் தோளில் சாய்ந்து பேசிக் கொண்டே என் சட்டை உன் கைக்குழந்தை ஆனதெப்படி??
நீ போன பின்னும் உன் வாசம் மட்டும் தங்கும் மாயம் என்னடி?

நடைபாதையில் நடக்கும் போது என் கை விரல்கள் தானாய் உன் கை தேடும்-நீ
நீங்கும் போது என் கைரேகையேல்லாம் உன்னோடு போகும்!!

உன் நகங்களின் ஓரத்தில் சிறு இடம் கொடு-நீ
அதை இதழ் தீண்டி எறியும் வாழ்ந்து போகிறேன்

நீ கொஞ்சிக் கொஞ்சி பேசும் வார்த்தை எல்லாம் என்னை விட்டு நீங்காத காதல் போதை!
நீ பேசாத நேரம் எல்லாம் உன்னை எண்ணி ஏங்கும் குழந்தை!!

உன் இதழோரம் முத்தமிட நெருங்கி வருவேன்-உன்
சுவாசம் பட்டு மயங்கிப் போவேன்!!

என் நெஞ்சில் நீ தந்த முத்தம் காயும் முன்னே
மீண்டும் ஒருமுறை தருவாயோ?
சுவாசமும் காதலும் கலந்த பின்னே இதில் காமம் இல்லை!!

நீ விட்டுச் சென்ற கைக்குட்டை மீதும் காதல் வந்தது
அடிக்கடி உன் இதழ் தீண்டிச் செல்வதால்!!

நொடிகள் பல நூறு நாம் பார்த்துக் கொண்டாலும்-நீ
என்னைப் பார்க்காத நேரம் உனை பாரத்து மகிழ்வேன்!!

நான் அனுப்பிய குறுஞ்செய்தி பார்த்தவுடன் சிரித்திடுவாய்-அதில்
தவறேதும் இருந்தால் கைப்பேசியை செல்லமாய் கடிந்திடுவாய்!!

பிடித்த பாடல் கேட்டால் உடனே என்னை நினைத்திடுவாய்-அதை
என்னையும் கேட்கச் செல்லி அழைத்திடுவாய்!

உன் தாயின் கருவறையையும் தந்தையின் அரவணைப்பையும் என் தோள்களில் உணர்ந்தாயோ?
உன் இன்ப துன்பமெல்லாம் வைத்துச் செல்ல!!

சிறு சிறு கோவம் கொள்வாய் அடம் பிடிக்கும் குழந்தை போலே!
புன்னகை வீசி மாயம் செய்வாய்-உன் கோவம் எல்லாம் மறந்தே போவேன்!!

கட்டிலும் ஒர் இசைக் கருவி அதில் ஸ்வரமும் ராகமும் நாம் ஆவதால்
போர்வைக்குள்ளே போர்க்களம் காண்போம்-அதில் அளவில்லா காதல் இலக்கணம் பயில்வோம்!!


உன் கண்ணம் போன்ற வண்ணம் ஏதுமில்லை!!
உன் விழியோரம் வழியும் மை-எம் இதயம் தாக்கும் கரு மின்னல்கள்!!

உன்னை கவிதையில் தேட தொடங்கி கனவிலும் தொடர்கிறேன்!
வெண்ணிற கனவுகளய் வருகிறாய்,உயிர் கொண்ட தமிழ் வார்த்தையாய் வருகிறாய்!!

மேகம் போலே ஆடை உடுத்தி,மின்னல் போலே பார்வை தீட்டி
அளவாய் செய்த சிலை போலே உயிர் கொண்டு
மண்ணில் வந்திறங்கி என் கண்முன்னே வந்து நிற்பாயோ??-சித்ராங்கதா!!

 -அஜய் ரிஹான்

கருத்துகள்