நாய்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சுற்றிக் கொண்டிருந்தது. திரும்பும் பக்கமெல்லாம் கல்லறைகள். நாய்களின் ஓலமிடும் சப்தத்தில் தூக்கம் கலைந்த ஆவிகள் காற்று வாங்க சுற்றித் திரிய - வெட்டியான் மணியன் மட்டும் நிம்மதியாய் தூங்கிக் கொண்டிருந்தான் கல்லறை வாசலை ஒட்டிய குடிசையில்.
காலை மணி ஏலே மூக்காலை காட்டியது கடிகாரத்தில், இன்னும் அனன்யா மட்டும் எழுந்த பாடில்லை. சமையக்கட்டிலிருந்து "ஏண்டி கழுதை இன்னிக்கு காலேஜ் போறியா இல்லையா ? இன்னும் தூங்கிட்டு இருக்க, எந்திரிடி" காலையிலேயே அர்ச்சனையை ஆரம்பித்து இருந்தாள் அனன்யாவின் அம்மா வசந்தி.
பேருந்து நிறுத்தத்தில் அனன்யாவிற்காக அவளது தோழிகள் காத்துக் கொண்டிருக்க, இவளோ அரக்க பறக்க ஓடிவந்துக் கொண்டிருந்தாள். "ஏண்டி, தினமுமா லேட்டா வருவ? சீக்கிரம் வாடி என அவளை கலாய்த்துக் கொண்டிருந்தனர்.இவளோ நீங்கலாம் சுமாரா ட்ரெஸ் பன்னிட்டு வரீங்க, நான் அப்படியா- நாங்கலாம் அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேணும்? என சினிமா பாணியில் அவர்களை திரும்பி கலாய்த்தள்.
அனன்யா டி-நகரில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பேஷன் டெக்னாலஜி படித்து வருகிறாள், அவளது அப்பா மித்ரன் ராணுவத்தில் 'பிரிகேடியர்' ஆக பணியாற்றி வருகிறார். பேச்சும், துணிச்சலும், துடுக்கும் அவள் தன் அப்பாவை போலவே கொண்டவள்.தப்பென்று தெரிந்தால் சட்டென்று கோபம் கொள்வாள். எதற்கும் பயப்படும் சுபாவம் அவளுக்கில்லை. ஆனால், அவளுக்குள்ளும் ஒரு குழந்தைத்தனம் எப்போதும் ஒளிந்து கொண்டிருக்கும்.அவளிடம் அன்பிற்கும் பஞ்சமில்லை.
கல்லூரி முடிந்து திரும்பி வரும் வழியில் கல்லறை தோட்டத்தின் அருகே அரை போதையில் மயங்கி கிடந்த மணியனிடம் "என்ன மணியன்னே புதுசா எத்தனை டிக்கெட் வந்துச்சு?, இப்படி குடிச்சிட்டுவிழுந்து கிடக்குற! ஸ்கூல் புள்ளைங்க வந்து போற நேரத்துல இப்படி பன்றியே நல்லாவா இருக்கு? குடியை விட்ருனே" என அக்கறையோடு சொல்லி விட்டு வீடு நோக்கி நடந்தாள்.
சரியாக மணி இரவு பன்னிரண்டு, கல்லறைத் தோட்டத்தில் வழக்கம் போல நிம்மதி தொலைத்த ஆவிகள் சில கதறிக்கொண்டும், நிறைவேறாத ஆசைகளோடு இறந்த ஆன்மாக்கள் வேதனையாய் அழுது கொண்டிருந்தது.
இன்று புதிதாய் வந்த ஆவி அநியாயமாய் சாலை விபத்தில் தான் கொல்லப்பட்டதை எண்ணி, தன்னை கொன்றவனை பழி வாங்க துடித்துக் கொண்டிருந்து தான் ஆவி என்பதையும் மறந்து !!
அடுத்த நாள் காலை சனிக்கிழமை விடுமுறை நாளென்பதால் ஆனந்தமாய் தூங்கிக்கொண்டிருந்தாள் அனன்யா. "ஏன் அம்மு (அனன்யாவின் செல்ல பெயர்) லீவ் நாளுன்னா இவ்ளோ நேரம் தூங்குறதா? வீட்ல அம்மாவுக்கு ஏதாவது ஒத்தாசை பண்ணலாமுல?", இந்த முத்தண்ணன் மளிகை கடைக்கு போய் கொஞ்சம் இந்த சாமானமெல்லாம் வாங்கிட்டு வரலாமுல்ல? - காலை வேலைகளுக்கிடையே புலம்பிக் கொண்டிருந்தாள் வசந்தி.
"என்னமா நீங்க இப்படி பண்றீங்களே மா ?" - காலையிலே அம்மாவை கலாய்த்துக் கொண்டு எந்திரித்தாள். உடனே தனது கைபேசியில் தன் தோழிகளுக்கு "Happy weekend, enjoy the day" என குரூப் மெசேஜ் ஒன்றை தட்டி விட்டு தான் வேலைகளை பார்க்கலானாள்.
முத்தண்ணன் கடைக்கு போகும் வழியில் ஒரு மருந்துக் கடையில் ஒருவன் திருநங்கை ஒருவரை இழிவாக பேசிக் கொண்டிருக்க, அந்த திருநங்கையோ அழுது கொண்டிருந்தார். இதை பார்த்த அனன்யாவுக்கு எங்கிருந்து தான் வந்ததோ அவ்வளவு கோவம், அவனை பார்த்து "ஏன்யா அவங்க உருவத்தை கேலி பன்றியா இல்லை அவங்க உணர்வை கேலி பன்றியா? உன்கிட்ட எதுனா அவங்க கேட்டா உன்னால முடிஞ்சா குடு இல்லையா அமைதியா இரு,
அதை விட்டுட்டு இந்த மாதிரி கேலி பண்ணி பேசுற வேலையெல்லாம் வெச்சுக்காத! - இதை கேட்ட அவன் எதிர்த்து பேச முடியாமல் அங்கிருந்து சென்றான். அந்த திருநங்கையோ அனன்யாவிற்கு தன் பார்வையால் நன்றி சொல்லிச் சென்றார்.
மறுநாள் அதே நடுநிசியில், அந்த கல்லறை தோட்டத்தில் அடிக்கும் காற்றிலும் அணையாது ஒரே ஒரு மெழுகுவர்த்தி மட்டும் எரிந்து கொண்டிருந்து.அந்த கல்லறை மீது ஒற்றை ரோஜாவும், ஒரு காகிதமும் ஆடிக் கொண்டிருந்தது.
கடிதத்தின் முதல் வரியில்...!!
-பயணம் தொடரும்!
குருதிப் புனல் - அத்தியாயம் 2
குருதிப் புனல் - அத்தியாயம் 2
கருத்துகள்
கருத்துரையிடுக