अण्ड भ्रम्हन्द कोटि अकिल परिपालन पूरण जगथ्करण सथ्य देव देवप्रिय!
वेध वेधर्थ सार यज्ञ यज्ञोमय निष्टल दुष्ट निग्रह सपथ लोग षोउरक्षन!!
सोम सूर्य अग्नि लोचन सवेथ ऋषभ वाहन सूल पानि भुजङ्ग भूषण!
त्रिपुर नास रर्थर योम केस महा सेन जनक पञ्चवक्त्र परसुहस्त नमह!!
பாய்ந்து ஓடும் கங்கை நதியில் மிதந்து வரும் சலனமற்ற சடலங்கள்
அங்கொன்றும் இங்கொன்றுமாய் பிணங்கள் - நீரில் உப்பியும், கழுகுகளும்
காக்கைகளும், கொக்குகளும் உண்ட மிச்சம் சிதறியும் சில!!
கரையோரம் அடுக்கடுக்காய் கட்டைகள் - வரம் வாங்கி காசியில் உயிர் நீத்த
உடலுக்கும், அவன் பூமியோடு கொண்ட பந்தத்திற்கும் - அக்னிக்கு ஆவாஹனமாய்!
காணும் இடமெல்லாம் திட்டில் தகதகக்கும் ஜவாலையில் அமைதியாய் உறங்கும் உடல்கள் - விறைத்து எழும் எலும்பெல்லாம் ஒரு அடியில் அடங்கி,
ஆடம்பரம் கண்ட தேகமெல்லாம் தோல் கருகி விழி உருகி, சதையெல்லாம் பூர்ணாஹுதி ஆகி சர்வமும் அடங்கும் ஒரு சொம்பில் - ஹஸ்தியாய் !!
பாவ புண்ணிய கணக்கெல்லாம் அழுக்காய் மாறி - கங்கையின் நிறமும் மாறியதோ ?
देवि सुरेश्वरि भगवति गङ्गे त्रिभुवनतारिणि तरलतरङ्गे ।
शङ्करमौलिविहारिणि विमले मम मतिरास्तां तव पदकमले
शङ्करमौलिविहारिणि विमले मम मतिरास्तां तव पदकमले
மாலையில் கங்கைக் கரையில் கடவுளின் சேவகரெல்லாம் ஒரு வண்ணத் துணி உடுத்தி - சர்ப்பம் தலை தாங்கிய பித்தளை மஹா ஆரத்தி விளக்கில் தீபம் ஜொலிக்க - மங்கள மந்திரங்கள் முழங்க, தூப தீப ஆராதனைகளில்
மூழ்கிப் போகிறாள் கங்கை.
யாதொரு உணர்வின்றி உலகம் கடந்த பந்தத்தில் திளைத்து - சர்வமும் சர்வேஸ்வரனாகி தனக்குள் அவனைத் தேடி - முற்றும் துறந்த மாய நிலையில் சாதுக்கள் - அகிலமும் ஆள்பவள் அவளென்று, காலம் கடந்து நிற்கும் காளியின் (ஷம்ஷன் தாரா) பக்தனாய் - அகோரமாய் அகோரிகள்
தோலோடு ஒட்டிய எலும்பும், தாடியும்-மீசைக்கும் உள்ளே புதைந்த வாயும்
நீண்ட சடையும், மனிதனின் ஹஸ்தி பரவிய உடலும்,காலபைரவனின் அம்சமாய் நிர்வாண ஆடையும் உடுத்தி நெற்றியில் சிவநாம குறியும்,
சுகம், துக்கம்,கோபதாபங்களை கடந்து சர்வம் சிவமயமாகி - ருத்ர ஸ்வரூபமாய் அவன் வாரணாசி வீதிகளில் அவன்!
எரிந்து கொண்டிருக்கும் பிணங்களை கண்டு கலங்கி போய் சுற்றி நிற்கும்
சொந்தங்கள் - பிறப்பொன்று நிகழ்ந்த போதே இறப்பொன்று உறுதியானது
அறியா மனிதனின் கண்ணீர் கண்டு புதிரான புன்னகை வீசும் விநோதமானவன் - முற்றும் கடந்தவனாய்!
கழுத்தில் ஆபரணமாய் மண்டை ஓடுகளும், வண்ண மாலைகளும் ஒப்பனை
செய்யாத முகமும், கைத்தடியாய் விலா எலும்பும், கூடாரத்தில் ஊதுபத்தி புகையும், திரும்பிய பக்கமெல்லாம் கபாலமும்- கமண்டலமும்!!
அசிங்கமில்லை - அழகில்லை எனக்கு, வெறுப்பு - விருப்புமில்லை மனதில்
இன்பதுன்பமில்லை - வெயிலோ, குளிரோ தாக்கமில்லை, மாற்றமெல்லாம்
தீண்டிச் செல்லும் என் தேகம் மட்டுமே - மரணம் கூட பயமில்லை - அனைத்தும் கடந்து அவனை அடைவதற்கு அதுவும் ஒரு பயணமே!
உணவில் சுவை தேடி அலையாது - யாசித்து புசித்துண்டு அதையும் பகிர்ந்துண்டு அனைத்திலும் சம உணர்வை நாடி - வெட்கம் நாணம் அதை மறந்து யாதொரு பொழுதும் பிறந்த மேனியாய் திரிந்து - இழிவென்றும், கழிவென்றும், மனித சதையென்றும், பாகுபாடின்றி தின்று - போதையிலும், சதை காணும் காமத்திலும், மந்த்ர தந்திர முழக்கத்திலும் எண்ணமெல்லாம் சர்வமும் ஒருநிலையில் ருத்ர மஹாதேவனிடம்!!
भैरव को शिवजी का अंश अवतार माना गया है। रूद्राष्टाध्याय तथा भैरव तंत्र से इस तथ्य की पुष्टि होती है। भैरव जी का रंग श्याम है। उनकी चार भुजाएं हैं, जिनमें वे त्रिशूल, खड़ग, खप्पर तथा नरमुंड धारण किए हुए हैं। उनका वाहन श्वान यानी कुत्ता है। भैरव श्मशानवासी हैं। ये भूत-प्रेत, योगिनियों के स्वामी हैं। भक्तों पर कृपावान और दुष्टों का संहार करने में सदैव तत्पर रहते हैं।
மண்டை ஓடுகளை பிச்சை பாத்திரமாக்கி - யாசித்து கிடைத்த உணவை தன்னை தேடி வந்த நாயோடும், மாடோடும் அதே ஓட்டில் பகிர்ந்துண்டு - தன்னிலை மறந்து இறைநிலை தேடி மயங்கி - விண்ணில் மிதந்து கொண்டிருக்கும் யோக நிலை.
தீரா மாய நிலை தேடி சிவபானத்தில் மூழ்கித் திளைத்து, கங்கையில் மிதந்து வரும் சடலங்களில் சபலமின்றி சதை புசித்து, தலைக்கேறும் போதையிலும் சித்தம் கலங்கினாலும் எண்ணமெல்லாம் காசிநாதனிடம் யாசித்து நிற்கும்.
போதாது மயக்கம் இன்னும் தேடி, மரிஜுவானா (கஞ்சா) இலைகள் மடித்து
உள்ளங்கையில் வைத்து தேய்த்து, கசக்கி, அதற்கான குழாயில் அடைத்து
அதன் மீது ஜிவாலை வைத்து அதனை ஸிவார்பணம் செய்து குழாயின்
நுனியை துணியால் மூடி கண்ணை மூடி ஒரு கணம் உள் இழுக்க - உடல் மட்டும் மண்ணில் கிடக்க விண்ணில் உயிர் பறக்கும் அனுபவம்
அடுத்த நொடி வெண்-மேகப் புகை போலே வாயும்-மூக்கும் மயக்கப் புகை தள்ள - அவனோ வானில் இமயமலை நோக்கிய பயணத்தில்!
நிசப்தமான மயானத்தில் உயிரற்று கிடக்கும் சடலத்தை கிடத்தி அதன் மீதமர்ந்து தியானம் செய்து
பரிபூரணமான சரணாகதி தேடி அலையும் அகோரிகள் சிவனுக்கும், காளிக்கும் ஆஹுதியாய் சிவபானத்தில் மூழ்கியும், மாமிசம் புசித்தும், காமம் புரியும் போதும் எண்ணமெல்லாம் ஒருநிலையாய் - கடவுளிடம்!!
நித்திரை தொலைத்த கண்கள் எல்லாம் நட்டநடு சாமத்திலே சுடுகாட்டிலே
சங்குகள் முழங்க - மனிதனை போல விருப்பமில்லாத பெண்ணை தீண்டும் அற்ப குணம் இவர்களுக்கில்லை - விரும்பி வந்த பெண்ணை மயாணத்திலே அவள் உடல் முழுதும் சாம்பல் பூசி, சுற்றி நிற்கும் அகோரிகள் மந்திரங்கள் சொல்ல அரங்கேறும் காமலீலா விநோதங்கள்!!
மாதவிலக்கு காலத்தில் மட்டுமே பெண்ணோடு கூடல் கொண்டு அதனால் கண்கட்டி வித்தைகள், பில்லி சூன்ய சக்திகள் பெற்று வாழும் நிர்வாண சுகவாசிகள்!! - இதற்கு ஒரு சரித்திர கதையும் உண்டு!!
காமத்தின் போதும் தன் ஒருநிலை சிதறாது சிவனை/காளியை நினைத்து ஒருமித்து இருத்தலே முக்திக்கும், இறைவனை அடைய வழியாக நினைப்பவர்கள் அகோரிகள்.
இறந்த பின்னே மனித உடலில் இருந்து எடுக்கப்படும் 'மனித எண்ணெய்' பல நோய்களுக்கு மருந்தாகிறதாக ஒரு கருத்தும் உண்டு!
மயானத்தில் தியானம் செய்வதும், பிணங்கள் மீது மோகம் கொள்வதும் அவர்கள் இயல்பே!
மரணம் கண்டு பயமேதும் இல்லாமல் - சதாஷிவனோடு ஒன்றிணைவது ஒன்றே குறிக்கோளாய் வாழும் இனம் இவர்கள் - மனித உணர்வுகள் தான் கடவுளை அடைய தடைக்கல்லாய் இருப்பது என என்னும் ஜீவன்கள்!!
இவர்களை மிருகமென்றோ, நாகரீகம் இல்லா ஜடங்களென்றோ ஏளனம்
செய்வோருக்கு இவர்கள் தீங்கேதும் செய்வதில்லை. நம்பி செல்பவருக்கு இவர்கள் தருவது வரம், இழிவாய் பார்ப்போருக்கு தருவதோ புதிரான பார்வை!!
எவரிடத்தும் கோபமோ,வெறுப்போ,காழ்புணர்ச்சியோ இல்லாத ஒரு குலம்,
சாதுக்களின் கண்களில் அமைதி நிலவும் எந்நேரமும்!!
உயிர் தாங்கும் குப்பைத் தொட்டி உடல், எண்ணங்கள் தான் உயிரை இயக்கும் சக்தி, தூய்மையான ஆன்மாவிற்கு மட்டுமே வாழ்வு. மண்ணோடு மக்கிப் போகும் உடல், இல்லை நெருப்போடு சேர்ந்து மிஞ்சுவதோ ஒரு பிடி சாம்பல் தான்!
जटाटवीगलज्जल प्रवाहपावितस्थले
गलेऽवलम्ब्य लम्बितां भुजंगतुंगमालिकाम्।
डमड्डमड्डमड्डमनिनादवड्डमर्वयं
चकार चंडतांडवं तनोतु नः शिवः शिवम
गलेऽवलम्ब्य लम्बितां भुजंगतुंगमालिकाम्।
डमड्डमड्डमड्डमनिनादवड्डमर्वयं
चकार चंडतांडवं तनोतु नः शिवः शिवम
- அஹம் பிரம்மாஸ்மி
"ஷம்ஷன் தாரா" தேவ-அசுர பாற்கடல் கடையும் போது வெளிப்பட்ட நஞ்சினை உண்ட நீலகண்டரின் மயக்கம் தெளிய மார்பமுதூட்டிய
தேவி. துர்கா தேவியின் ஸ்வரூபமான தாரா தேவி சிவனுக்கு பாலமுது அளித்தமையால் தாய்மை குணம் அடைந்தார்.
தக்க்ஷன் யாகத்திலே சிவனை அவமதித்ததால் அக்னிப் பிரவேசம் செய்த சக்தியின் உடலை தோளில் வைத்து ருத்ர தாண்டவமாடிய சர்வேஸ்வரனை சமாதானப் படுத்த விஷ்ணு தன் சங்குச் சக்கிரத்தால் சக்தியின் உடலை 108 பாகங்களாய் பூமியில் விழச்செய்தார். அதுவே 108 சக்தி பீடங்களானது.
"காமக்கியா" - 108 சக்தி பீடங்களில் ஒன்று,இங்கே முற்றிலும் மாறுபட்ட வழிபாடுகள் நடைமுறையில் உள்ளது. இங்கே உள்ள பிரம்மபுத்திர ஆறானது ஆஷாட மாதத்தில் (ஜூன்) சிவப்பு நிறமாய் மாறுவதாகவும், அந்த கோவில் மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாகவும், அந்த புனித நீரானது பக்தர்களிடையே பிரசித்தி பெற்றதாகவும் தகவல்கள் உண்டு!!
கருத்துகள்
கருத்துரையிடுக