நாட்டுக்காக உயிர் நீத்த பிரிகேடியர் மித்ரன் கல்லறையில் உறங்கிக் கொண்டிருக்க, இங்கு வசந்தியும், அனன்யாவும் அடுத்து செய்வது அறியாமல் தவித்தனர். என்ன தான் பணியில் இருக்கும் போதே இறந்ததால் மாத ஓய்வூதியமும், அரசாங்க உத்தியோகமும் குடுத்தாலும் ஈடுகட்ட முடியா இழப்பில் துடித்தது போனாள் வசந்தி.
அனன்யா சிறிது தெளிவான முடிவொன்றை யோசித்துக்கொண்டிருந்தாள். மறுநாள் காலை சென்னையில் உள்ள ராணுவ தலைமையகத்தில் அதிகாரிகளை சந்திப்பது பற்றி யோசனையில் மூழ்கினாள்.
அந்நேரம் பார்த்து வீட்டிற்கு அவளது தோழிகள் வந்தனர், "அம்மு அதையே நெனச்சுக்கிட்டு இருக்காத, வழக்கம் போல காலேஜ்க்கு வர ஆரம்பி, தேவை இல்லாம எதையும் யோசிக்காத, நீ தெரியாம இருந்தா தான அம்மா தெம்பா இருப்பாங்க, வாடி நாங்களாம் இருக்கோம்ல" என ஆளாளுக்கு தைரியம் சொன்னார்கள்.
அவர்களிடம் அம்மு "நன் தைரியமா தாண்டி இருக்கேன், யாரும் இங்க நிலைச்சு வாழ போறதில்ல, என்ன அப்பாவோட கொஞ்ச காலம் தான் வாழ்ந்திருக்கேன், அவரு எப்பவும் காஷ்மீர், ராணுவம்ன்னே இருந்துட்டாரா அதான் கொஞ்சம் கவலை. நான் நாளைல இருந்து காலேஜ் வரேன்டி. செய்ய வேண்டியது நிறையா இருக்கு. விதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குமோ?!! என தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
மறுநாள் காலையில் சென்னை போர்ட் செயின்ட் ஜார்ஜ் கோட்டை அருகில் உள்ள ராணுவ தலைமையகத்திற்கு அனன்யாவும், வசந்தியும் வந்து சேர்ந்தனர். அங்கே அலுவலக தலைமை அதிகாரி கெர்னல்சந்தீப் சிங் அவர்களை வரவேற்றார். அவரது அறையில் ராணுவ அதிகாரிகள் சிலர் கூடி இருந்தனர்.
அங்கே குழுமி இருந்த அனைவரும் மறைந்த பிரிகேடியர் மித்ரனுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். பின்னர் தலைமை அதிகாரியை தவிர அனைவரும் அங்கிருந்து சென்றனர்.
மித்ரனின் மரணம் நம் நாட்டிற்கே பெரும் இழப்பு தான், இருந்தாலும் அவருடைய வீரத்தால் தான் நம் எல்லையில் அமைதி நிலவுகிறது. ஆயிரம் சமாதானங்கள் சொன்னாலும் உங்களுக்கு அவருடைய இழப்பானது இது செய்ய முடியாத ஒன்று தான், ஆயினும் எங்கள் தரப்பில் இருந்து ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் கேளுங்கள். அவருடைய ஓய்வூதிய தொகை மாதம் தோறும் உங்களை வந்து சேரும். மத்திய அரசாங்க உத்தியோகம் உங்கள் மகளுக்கு தரப்படும், உங்கள் மகள் விரும்பினால் அவர்களும் ராணுவத்திற்கே வரலாம் என்றார்.
சிறிது நேர மௌனத்திற்கு பிறகு வசந்தி, தெளிவான குரலில் " நாட்டுக்காக அவரை அர்ப்பணித்த பிறகு நாங்கள் அவரை எண்ணி வருத்தப்படுவதில் அர்த்தம்மில்லை, வீட்டுக்காக ஒருவன் வாழ்வது கடமை ஆனால் நாட்டுக்காக அவன் வாழ்வது பெருமை, அந்த வகையில் நாங்கள் பெருமை கொள்கிறோம். அனன்யா ராணுவத்திற்கு போகக்கூடாது
எல்லையில் நடக்கும் அத்துமீறல்களை தடுக்க ஆயிரக்கணக்கான வீரர்கள் இருக்காங்க, ஆனா இங்க நம்ம நாட்டுக்குள்ள எவ்வளவோ மனித எல்லை மீறல்கள், உரிமை மீறல்கள், தனி மனித ஒழுக்கம் இல்லாமல் செய்யும் தவறுகள் இப்படி எத்துணையோ அநியாயங்கள் நம் நாட்டிலேயே கொடி கட்டி பறக்கிறது. தினமும் நாளிதழில் பக்கங்கள் முழுவதும் ஆக்கிரமித்து இருப்பது கொலை, கொள்ளை, இன்னும் பல!! எல்லாவற்றிலும் புகுந்து ஊடுருவி நிற்கிறது அரசியல்! மக்கள் தினம் வாங்கும் ரேஷன் பொருட்கள் முதல் மயானக் காட்டில் எறியும் கட்டை வரை அனைத்திலும் ஊழல். இங்க நடக்குறது எல்லாத்தையும் தடுக்கமா நாம நம்ம எல்லைல மட்டும் பாதுகாப்பு தந்தா போதுமா சார் - சற்றே ஆவேசத்துடனும், கோவத்துடனும் சொல்லி முடித்தால் அனன்யா.
அனன்யாவின் இந்த பேச்சைக்கேட்ட கெர்னல் சற்றே வியந்து போனார்,அவர் "well said, i appreciate your views and care on our society" ஆனா அனன்யா அதுக்கு தான் நம்ம நாட்டுல போலீஸ் அதிகாரிகள் இருக்காங்க, அவங்க நம்ம நாட்டு மக்களை பாதுகாக்க தான இருக்காங்க, அவங்களிடம் நம்ம பிரச்சனைய தைரியமா கொண்டு பொய் சொல்லணும். "They will secure us from the problem". இதைக் கேட்ட அனன்யா "Police are there but., i don't want to place here the negatives of that police department, if they wish to be honest and truthful to the society then their superior officers stops them, i'm just saying that the hierarchy was not strong to strengthen the country sir"
அவளும் அவளது ஆழ்மனது ரௌத்திரமும் சற்று கொந்தளித்து தான் வெளிப்பட்டது. கெர்னல் இறுதியாக "I'm just seeing you as a shadow your father's blood"
அரைமணி நேர உரையாடலுக்கு பிறகு, வசந்தியும், அனன்யாவும் கிளம்ப தயாரானார்கள்.கெர்னல் வசந்தியிடம் "உங்கள் மகள் சிறந்த தொலைநோக்கு பார்வை உடையவராய் இருக்கிறார், இத்தகைய குணம் உடையவர் சிறந்த உயரங்களை அடைவார்" என வாழ்த்தினார். நீ எந்த துறையில் பணியாற்ற விரும்புகிறாயோ அதில் ஒரு தெளிவான ஒரு முடிவோடு என்னை உனது கல்லூரி படிப்பு முடிந்தவுடன் வந்து சந்திக்குமாறு சொல்லி அனுப்பினார் கெர்னல் சந்தீப் சிங்.
***
அடுத்த நாள் காலை வழக்கம் போல் அனன்யா கல்லூரிக்கு கிளம்பினாள், ஆனால் அவள் மனதுக்குள் அப்பாவின் மரணம், நாளிதழில் படித்த செய்தி, அவளை சுற்றி நடக்கும் சிறு சிறு தவறான விஷயங்கள் அவளுக்குள் அவள் தந்தையின் வீரம் அவளை தீவிரமான சிந்தனைக்குள் தூண்டிக் கொண்டிருந்தது.
அன்றைய வகுப்புகள் முடிந்த பிறகு அவள் தோழிகள் மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை பார்த்து அவர்களை நோக்கி நடந்தாள். அனைவரும் அடுத்த வாரம் சுற்றுலா செல்வதை பற்றி ஆர்வமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். அனன்யாவிற்கோ சுற்றுலா செல்ல விருப்பமில்லை, இருந்தாலும் தோழிகளிடம் சகஜமாய் "எங்கடி போறீங்க, கொஞ்ச நாள் காலேஜ்க்கு வரலை என்னடி நடக்குது? " என்றாள்.
கேரளா போகப் போறோம், நீயும் வர தான அம்மு? என்றாள் தோழிகளில் ஒருத்தி பிரியா. இல்லடி நான் வரலை, அம்மா தனியா இருப்பாங்க. நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க என்றாள். நாங்க உன் அம்மாகிட்டயே பேசிக்கிறோம் என உடனே அலைபேசியில் அம்முவின் அம்மாவிடம் சுற்றுலா செல்வதை பற்றி விவரித்தாள்.
வசந்தி அம்முவிடம், அவங்க தான் கூப்பிடறாங்கல்ல போயிட்டு வாயேன், உனக்கும் ஒரு மாறுதலா இருக்கும்ல்ல, போயிட்டு வா அம்மு. யாரோட மறைவும் நம்மளோட வாழ்க்கையை அப்படியே நிறுத்திராது, நம்மக்கு முக்கியமானவங்களோட இழப்பு நம்மல வருத்தப்பட தான் வைக்கும் ஆனா காலம் நகர நகர அதுவும் மறைஞ்சு போகும். அம்மாவின் வாழ்க்கையின் பேச்சு யதார்த்தத்தை உணர்த்தியது.
தன் தோழிகளிடம் "So girls, when are we going to kerala?" என்றாள் குதூகலமாய்!!

கருத்துகள்
கருத்துரையிடுக