ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!


காதலினால் மானுடர்க்கு கவிதை யுண்டாம்: கானமுண்டாம்: சிற்பமுதற் கலைக ளுண்டாம்: ஆதலினால் காதல் செய்வீர்: உலகத்தீரே! - பாரதியார்

சின்ன சின்ன பூக்கள் எல்லாம் சிணுங்கி கொஞ்சிடும் வண்டுகளோடு செய்யும் காதல் போலே தீரா எல்லை கொண்டு மனிதர் நாமும் ஆதலினால் காதல் செய்வோம்..!!
முட்டி மோதும் காற்றோடு புல்லாங்குழ் போலே நாமும் இதயம் கலந்து ஊடல் கொள்வோம்!
விண்ணில் திரியும் பறவை போலே சிறகுகள் முளைத்து காதல் கானம் பாடித் திரிவோம் - குயிலிசையில்!!

தேகம் மூட்டிச் செல்லும் காமத் தீயில் காதலை இரையாக்காமல், கைகள் கோர்த்து காற்றின் இடைவெளியில் ரேகைகள் போலே நாமும் ஒன்றராய் கதைகள் பல பேசித் திரிவோம் - ஆதலினால் காதல் செய்வோம்

மோகமில்லா மேகம் போலே ஆசைத் துளிகளை சிந்திச் செல்வோம் - பாய்ந்தோடும் கடலை போலே காதல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடட்டும் அதிலே நாமும் மூழ்கி கொஞ்சம் முத்து(தம்) எடுப்போம்!!

கரையோரம் நுரைகளை விட்டுச் செல்லும் அலைகளை போலே - நாமும் காதலில் கொஞ்சம் ஆணவத்தை விட்டுச்செல்வோம்!!
சிப்பிக்குள் ஒளிந்திருக்கும் முத்தை போலே இதயத்திற்குள் காதலை தேடித் திரிவோம்!!

எல்லையில்லா காதலில் கொஞ்சம் கள்ளமில்லா அன்பை கலப்போம் - தினமும் புன்னகைகள் பல பூத்துக்குலுங்க !!
உன்னவள் மடி மீது தலை வைத்துறங்கி கொஞ்சம் சேயாகி மகிழ்ந்திடு - அவளும் கொஞ்சம் உந்தன் தலை கோதி மகிழட்டும்!!

காலையில் உன்னை தேடி அலையும் அவள் கண்களின் கேள்விக்கு அவள் கன்னத்தில் உன் இதழ்கள் பரிசளிக்கட்டும் பதிலாய்!!

அவள் கேளாமலே
கொலுசோடு சிணுங்கும் அவள் பாதங்களை கொஞ்சம் மென்மையாய் பிடித்து விடு - நீயும் அவள் சிரித்துக் கொண்டே உறங்கும் அழகை கொஞ்சம் ரசித்திடு!!

சின்ன சின்ன குறும்புகள் செய்திடு செல்லமாய் நீயும் - அவள் எதிர்பாரா நேரம் அவளை பின்னிருந்து அணைத்திடு - அரவணைப்பில் கொஞ்சம் கதகதப்பாய்!

தூக்கம் தொலைத்த இரவெல்லாம் கண்கள் சொல்லும் கதைகள் கேட்டு இதழ்கள் மௌனமாய் தூங்கும் அழகு அதனை நிலவுகள் ரசிக்கும் - ஆதலினால் காதல் செய்வோம்

உன்னை போகச் சொல்லி ஏங்கி நிற்கும் அவள் முகம் - கொஞ்ச தூரம் நடந்த பின்னே தானாய் நிற்கும் உந்தன் கால்கள்!! 

ஒரு நொடிக்கும் இன்னொரு நொடிக்கும் உள்ள இடைவெளியில் ஆயிரம் முறை மின்னல் தாக்கும் உந்தன் ஞாபகம் - காற்றில் வீசும் உந்தன் வாசம் காற்றில் என் முகம் மூடிச் செல்லும் உந்தன் ஆடை காட்டும் உந்தன் உயிர் ஓவியம்!!

ஜீவனுக்குள் ஜீவன் வைத்து - அதை காதலினால் ஒன்றரை தைத்து 
கோடி முறை இதயம் துடித்து ஊடுருவும் ஸ்வாசம் போலே நாமும் ஆதலினால் காதல் செய்வோம்!!

தேகம் மேலே மோகம் மூடி தேடிச் செல்லும் பாதை எல்லாம் காதலை சென்று அடைவதில்லை - அவை தேடித் சென்று அடைவது வெறும் உயிரற்ற உணர்வற்ற காற்றடைத்த உடலைத் தான் - ஆதலினால் காதல் செய்வோம் - உண்மையாய் !!
-அஜய் ரிஹான்

கருத்துகள்