இசை



என்னை மயக்கும் இசையே !

எழுதா கவிதையே ! தாலாட்டும் மொழியே!!
காற்றில் பரவி என்னை இயக்கம் கருவியே!!

ராகங்கள், கீதங்களின் தாயவள் யாரோ?
இசை மகளின் கரம் பிடித்து நெடுந்தூரம் நான் பயணிக்கவோ!!

தாய் மடியில் என்னை தட்டி அவள் பாடும் ஆரிரரோ நான் கேட்ட முதல் ராகம்!

காதலை சொல்ல தூங்காத விழிகள் அமிர்த வர்ஷினியில் மூழ்கிப்போக, ரோஜாக்களும் மயங்கியே போகும் !!

ஜீவனுக்குள் ஊடுருவி ஒவ்வொரு நாடி நரம்பெல்லாம் இசையில் தாளம் போட, பனி விழும் மலர் வனத்தில் எனக்குள் ஏதோ கொஞ்சம் மயக்கம்!!
-சாலநாட்டை'யில் என்ன நாட்டமோ?!!

சரசரவென்று சரமாரியாய் மின்னல்கள் பல - சரசாங்கி' யில் என்றும் ஆனந்தமே!!

கோவிலிலும் கலைவாணியின் அருள் எல்லாம் 'கல்யாணி' யில் என்னை வந்து சேர, கொஞ்சம் பரவசமாகிறேன்!! என்னையும் மறந்து முணுமுணுக்கிறேன் - ஜனனி ஜனனி ஜகம் நீ !!

ஸ்வர வரிசைகள் கேட்கும் பொது என் விரல்கள் தானாக இசைக்கும் தக திமி  தகிட- செல்லமாய் ஷண்முகப்ரியா என்னுள் செய்யும் மாயா ஜாலங்கள் !

அந்தி மாலைப் பொழுதில் ஜன்னலோரத்தில் என்னவள் ஏன் தோள் சாய்கையில் வசந்த'மாய் ஒரு ராகம் என் நெஞ்சில் பாய!!

ஏக்கமும், பிரிவும் என்னை வாட்டும் போது கீரவாணியாய் என் காதோரம் சில்லென்ற தூறல் மழை !!

 நாடு பற்று எஞ்சி வீரம் வீறிட்டு நிற்கும் போதெல்லாம் சாருகேசியில் சின்னஞ்சிறு கிளிகளும், பாரதியின் கண்ணம்மாவும் கண் முன்னே பறந்தும், உலாவியும் தெரிவதென்னவோ ?

இசையில் லயித்து, இசையில் வாழ்ந்து, இசையில் உருகி, இசையால் ஆட்-கொண்டு வாழ்வேனோ?
இசை போலே ஒரு வாழ்க்கை - அதிலே நானும் (ரசிக)ரஞ்சனி 'யின் ரசிகனாகி போவேனோ ?!!

 சொல்லா வரிகள், கேளா ஸ்வரங்கள், எழுதா சரணங்கள்!
இசையை ரசிக்கிறேன் - ரசிகனாய் !
இசையால் மாற்றம் காண்கிறேன் - என்னுள்!
எண்ணங்கள் இசைகிறது - இசையாய் !!
என்னவளும் ரசிப்பாள் இசையாக - இசையை - என்னை !!

சங்கீதமே! என்றும் சந்தோஷமே !!

Best evergreen tamil classical songs 
- அஜய் ரிஹான்


கருத்துகள்