குருதிப் புனல் - அத்தியாயம் 5


எல்லாம் தயாராகியது கேரளாவிற்கு செல்ல!!

வாட்'ஸ் அப் குழுமத்தில் 'சாட்டிங்' பொறி பறக்க நடந்து கொண்டிருந்தது.சென்ட்ரலில் இருந்து மாலை 7.45 க்கு புறப்படும்  'திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்' -டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.அனன்யாவுடன் சேர்த்து 45 பேருக்கும்,சரியாக மாலை ஐந்து மணிக்கு அவளது கல்லூரியில் இருந்து புறப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவளது வகுப்பில் 23 மாணவர்களும் 20 மாணவிகளும் இருந்தனர்.


அனன்யாவின் வீட்டிற்கு ப்ரியா மத்தியானமே வந்திருந்தாள், அவர்கள் இருவரும் சேர்ந்து செல்வதாய் திட்டமிட்டிருந்தனர். வசந்தி அவர்களிடம் 'வாங்க இரண்டு பேரும் வந்து சாப்பிடுங்க, சாயிந்திரம் நேரமா கிளம்புவீங்களாம் '- டைனிங் டேபிளில் இருவருக்கும் சாப்பாட்டை எடுத்து வைத்தாள்.இரும்மா வரோம் என்றாள் அம்மு அறைக்குள் இருந்தபடியே!!

ப்ரியா,இன்னிக்கு போயிட்டு என்னிக்கு வருவீங்கடி? தேவையானதெல்லாம் எடுத்து வெச்சுடீங்களா? பத்திரமா போயிட்டு வரணும் சரியா?உடனே அதெல்லாம் நாங்க பத்திரமா போயிடு வந்திருவோம்மா என்றாள் அம்மு, நான் உன்ன சொல்லடி ப்ரியாவை சொன்னேன் என்றாள் வசந்தி ஒரு புன்னகையுடன்.

சாப்பிட்டு விட்டு இருவரும் அவரவர்கள் போட்டுக்கொள்ள எடுத்து வைத்த ட்ரெஸ்ஸை பத்தி அளவலாவிக்கொண்டிருந்தனர்,இடையே எங்கெங்கு செல்ல வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் லிஸ்ட் போட்டுக் கொண்டிருந்தனர்.

மணி 3'00, ஏண்டி நான் போயி குளிச்சுட்டு வந்துடுறேன், அப்புறம் நீ போயி ரெடியாகு என்றாள்.வசந்தி ரெண்டுபேருக்கும் 'டீ ' எடுத்துக்கொண்டு வந்தாள். என்னம்மா ப்ரியா இளவரசி இப்பவே பாத்ரூம்குள்ள புகுந்துகிட்டாளா ?, அதுசரி அப்பத்தான வந்து மேடம் மேக்-அப் போட கரெக்டா இருக்கும் என சொல்ல ப்ரியாவும், வசந்தியும் புன்னகைத்துக்கொண்டனர். எம்மா சொல்லி இருந்தா நானே வந்து வாங்கிட்டு வந்து இருப்பேன்லம்மா, நீங்க ஏன் சிரமப்படுறீங்க? என்றாள் ப்ரியா, பரவாயில்லம்மா நீ குடி, அவ வந்தா சொல்லு சூடு பண்ணி கொண்டு வரேன். நீங்க ரெண்டு பெரும் ரெடி ஆகிட்டு வாங்க லேட் ஆயிட போகுது.

அரைமணி நேரம் கழித்து குளித்து முடித்து வந்த அம்மு ப்ரியாவிடம் 'ஏண்டி நீ என்ன கலர் டிரஸ் போடற ? சொல்லிட்டு போ, இல்லாட்டி ரெண்டு பெரும் ஒரே கலர் போடலாமா ?' - சரிடி நாம பிங்க் கலர் போட்டுக்கலாம் என்றாள் ப்ரியா. இருவரும்  ரெடியாகி வெளியே வரும் போது மணி சரியாக 4'00 p.m .

அம்மு, எல்லாம் எடுத்து வச்சுகிட்டியா?, எதையும் மறந்திடாத, ஒரு தடவ செக் பண்ணிக்கோ. இதுல சப்பாத்தியும், தக்காளி கொஜ்ஜும் வெச்சு இருக்கேன் உங்க ரெண்டுபேருக்கும் நைட் Train 'ல  சாப்பிட்டுக்கோங்க, தண்ணி பாட்டில் வெச்சு இருக்கேன் தீந்துருச்சுன்னா வாட்டர் பாட்டில் வாங்கிக்கோ, உன் Friends கூடவே போ, வா தனியா போகாத சரியா ?!! இந்தா இதை செலவுக்கு வெச்சுக்கோ, பணத்தை பத்திரமா வை, careless'ஆ இருக்காத. Trip நல்லா enjoy பண்ணிட்டு வா என்றாள் வசந்தி ஒரு பொறுப்பான தாயாக!!

சரிம்மா, நான் பத்திரமா போயிடு வரேன், நீ பத்திரமா இரு, சென்ட்ரல் போயிட்டு உனக்கு போன் பண்றேன்.வாம்மா 'Let's Take A selfiee' - மூணு பேரும் சந்தோஷமாய் சொன்னாரகள் - Cheeeeseeeeeee!!

காலேஜில் இருந்து அனைவரும் கிளம்ப தயாரானார்கள்.சுற்றுலா   In-charge ஜெயஸ்ரீ, அர்ஜுன் 'னும் அவர்களோடு சேர்ந்து கொண்டனர். அவர்கள் இருவரும் மாணவர்களுக்கு Professor ஆக மட்டுமில்லாமல் சிறந்த நண்பகர்ளாக இருந்தார்கள்.காலேஜ் பஸ்சில் அனைவரும் ஏறினர்.பஸ்சில் ஏறியவுடன் ப்ரியா தான் கொண்டு வந்திருந்த Pen-drive'வில் Copy பண்ணி வெச்சிருந்த பாடல்களை போட, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் ஆரம்பம் ஆனது!! - போட்ரா விசில - உள்ளிருந்து அனன்யா!!


சென்னை- சென்ட்ரல்...!

அனைவரும் பஸ்சில் இருந்து இறங்கி இரண்டாம் Platform 'க்கு நடந்து போய் கொண்டிருந்தனர்.அம்மு தன் ஜெஸ்ஸி (ஜெயஸ்ரீ) மேடம் கிட்ட 'எந்த coach ல புக் பண்ணி இருக்காங்க மேம்? - S-3'ல 1-37, ஷார்ப்பா 7.45 க்கு train வந்துடும்,so you girls have a walk around the platform, and gather here sharply by 7.30 - ஜெஸ்ஸி மேடம் சொன்னதும்  அனன்யா, ப்ரியா, இன்னும் அவளது தோழிகள் இருவரும் சேர்ந்து ஸ்டேஷனுக்குள் சிறிது தூரம் நடந்து வரலாம் என கிளம்பினர். இன்னும் சில மாணவிகளும் அவரவர் குழுவோடு புறப்பட்டனர்.

பசங்க எல்லோரும் அர்ஜுன் சார் கூட அப்படியே அங்குள்ள  கடைகளில் தங்களுக்கு தேவையான குளிர்பங்களை வாங்கிக் கொண்டிருந்தனர்.

அங்கங்கு அடுக்கடுக்காய் பெட்டிகள் கொண்ட ரயில்களும், சரக்கேற்றி போகும் Goods வண்டியும், பாரம் சுமந்து செல்லும் போர்ட்டர்'களும் கீச்...கீச் சத்தத்தோடு ஊர்ந்து செல்லும் தள்ளு வண்டிகளும், நீண்ட பாம்பொன்று சத்தமாய் பெருமூச்சு விடுவதை போல வந்து நின்ற ரயிலின் என்ஜின் சத்தமும் அங்கங்கு கேக்க, ரயிலின் வருகையை தமிழ்,ஆங்கிலம், ஹிந்தி என மாறி மாறி ஒலிபெருக்கிகள் அறிவித்துக்கொண்டிருக்க, இரண்டு ப்ளட்போர்ம்'களை இணைக்கும் ' over-bridge'ல்  கூட்டம் கூட்டமாய் அலைந்து கொண்டிருக்கும் மனிதர்களும், ஸ்டேஷனில் ஒவ்வொரு திசையிலும்  துப்பாக்கி ஏந்திய ரயில்வே போலீசும் நின்று கொண்டிருக்க ரம்மியமான காற்றில் ப்ரியாவும்,அவளது தோழிகளும் அமர்ந்து யூடூப்பில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தனர். 

 ஏண்டி இங்க வந்தும் இந்த போனை வெச்சுட்டு உக்காந்து இருக்கீங்க? வாங்க அப்டியே கொஞ்ச தூரம் போயிடு வரலாம். சரி வாடி போலாம் என நால்வரும் மெல்ல நடந்தனர். நடக்கும் பாதையில் அனன்யா சின்ன சின்ன விஷயங்களை ரசித்தபடி நடந்தாள்.

ரயிலுக்காக காத்திருக்கும் மக்கள், ஒரு கையில் பெட்டியும், இன்னொரு கையில் தன் மகனையும் பிடித்துக்கொண்டு நடந்து செல்லும் அப்பா, மெல்ல நடந்து செல்லும் தன் வயதான கணவரை தொடர்ந்து செல்லும் மனைவி, கடைகளில் விற்கும் மிட்டாய்களையும், தீனிகளையும் பார்த்துக் கொண்டே நடக்கும் குழந்தைகள், அங்கங்கே அழகான வண்ண வண்ண பட்டாம்பூச்சிகளாய் பெண்களும், அவர்களை பார்த்து சிறகடிக்கும் இதயங்களாய் இளம் ஆண்களும்!!

Chaai...Chaai...vadaa...ரயில்வே ஸ்டேஷன்க்கே உண்டான சங்கீத குரல்கள் அங்கங்கு ஒலிக்க,இரவில் ஊளையிடும் நரி போலே உறுமிக் கொண்டிருந்த ரயிலின் ஹாரன் சத்தமும் - இவை எல்லாம் ரசித்துக் கொண்டே நடந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. ஆனால் அம்முவிற்கு அவளை யாரோ பின் தொடர்வதை போல நினைத்தாள், இருந்தாலும் அதை வெளிகாட்டிக்கொள்ளவில்லை.
அவளது போனில் ஜெஸ்ஸி மேடம் கூப்பிடுவது பார்த்து ப்ரியாவையும், தோழிகளையும் கூப்பிட்டாள்,'ஹே போலாம் வாங்க நேரம் ஆச்சு மேடம் கூப்பிட்டாங்க'- எல்லாரும் ஒரே இடத்தில் ஒன்று சேர்ந்தனர்.

ஒலிபெருக்கியில் 'Train Number 11567, Chennai to Kerala, Trivandapuram express will arrive  shortly in platform number:02'. ஜெஸ்ஸி மேடம் மாணவர்களிடம் 'Girls, take all your belongings, and occupy yourself in S-3 coach, seat numbers starts form 01-21. so make yourself comfortable for the journey.' எல்லாரும் சேர்ந்து ஒரே குரலில் 'ஒகே மேடம்ம்ம்ம்ம்ம்!!' கடைசியாய் அம்முவும், ப்ரியாவும் ஏறிக்கொண்டிருந்தனர்.

அர்ஜுனும் பசங்க இருபது பேரும் S-2 கோச்சில் 1-24 இருக்கைகளை எடுத்துக்கொண்டனர். 


நடைபாதையில் இருந்த தூணிற்கு பின்னல் இருந்து இரு கண்கள் மட்டும் அவளை பார்த்துக்கொண்டே இருந்தது!! அது அவனா-அவளா?!!! 

-கிளம்பியது தொடர்வண்டி- தொடரும் பயணமும்!!

கருத்துகள்