கள்வன் தேடும் இதயம் - நீயும் நானும் - நாமும்


 
பேச ஆயிரம் மொழிகள் இருந்தும் உன்னிடம் ஊமையாகி
போகிறது என் இதழ்கள் - இருளில்
தாயை தேடும் குழந்தை போல தனிமையில்
உன்னை தேடுவது ஏனோ ?

உண்மையாய் என்னை கொஞ்சி பேசிட வேண்டாம் - பொய்யாய்
ஒரு முறை உன் விழியால் பாரடி!
கருமேக வண்ணம் எடுத்து உன் உருவ படம் புதைத்து
என் நெஞ்சில் நிற்கும் உன் புகைப்படம்
வண்ணம் இல்லாமல் இல்லை - வானவில்லாக நீ வருவாய் என!

உன் செவிகள் தினமும் கேட்கும் பாடல்களில்
ஏதேனும் ஒரு பாடலின் பல்லவியாக மாட்டேனோ?
நீ தினமும் என்னை நினைத்துக் கொள்ள!
உன்னுடன் செல்லக்குழந்தையாய் எப்பொழுதும் சுற்றித்திரியும்
கை பேசியாய் நானும் மாறிடமாட்டேனோ ?

என்  தனிமை எல்லாம் உனதாகிப் போக - கனவுகளில்
எல்லாம் நினைவுகள் காதல் கரைகளில் ஒதுங்கிப் போக
நொடிக்கும் நொடிக்குமான இடைவெளியில் ஆயிரம்
முறை உன் முகம் வந்து போக - நீயும் நானும் சேரும் நொடிக்காக !

மழையில் நீயும் உன் மழலையில் நானும்
கொஞ்சம் நனைந்திட மாட்டோமா ?
என் கவியில் நீயும் - உன் சிரிப்பில் நானும்
மூழ்கித் திளைப்போமா ?
ஸ்வரங்கள் நுழையா உன் பாடலில் நான் லயிக்க - கள்ளம்
இல்லா என் உள்ளத்தில் நீ கொஞ்சம் சினுங்க - கொள்ளை
கொள்ளும் மாயம் நீ !

மடியில் தாங்கும் தாயை போல - உன்னை
எந்தன் நெஞ்சில் தாங்க ஜென்மங்கள் எத்தனையோ
அத்தனையிலும் வரம் வாங்கி வருவேன் உனக்காக!
என் மார்பில் உன் முகம் புதைத்து அரவணைப்பேன் - உன்
தந்தை முகம் எண்ணில் காண!

இத்தனையும் என்னுள் வைத்து நீ சொல்லும்
ஒரு வார்த்தைக்காக தனிமைத் தீவில் - நிலவொன்றை பார்த்து
அதை உன் முகமென நினைத்து - தேய்ந்தும்
வளர்ந்தும் மாற்றம் காண்கிறேன் - நான்

நீயும் நானும் - நாமும் !
விடையா நீ இல்லை - நான் காணும் வெறும் கனவா நீ ?

-அஜய் ரிஹான்

கருத்துகள்