விடையில்லா அந்த கண்களின் பார்வையின் அர்த்தம் புரியாமல் ஒருவிதமான குழப்பத்துடனே கிளம்பினாள் அனன்யா. ஆனால் அவளுக்கு அப்பொழுது தெரியாது அந்த கண்கள் மீண்டும் இந்த பயணத்தில் சந்திக்கும் என்று. இந்த எண்ண அலைகளை ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தோடு இணைந்து எழுப்பிய சத்தத்தில் கலைந்தது.
அந்த S -3 கோச் முழுவதும் இவரக்ளின் ஒரே அலப்பறை தான். அதை பற்றி யோசித்துக் கொண்டிருக்காமல் தன் தோழிகளுடன் சாகசமாய் எப்பொழுதும் போல தன் குறும்புத்தனமாய் இருக்க ஆரம்பித்தாள். ஒரே ஆட்டமும், பாட்டுமாய் தொடங்கியது சுற்றுலா. அமைதியான அந்த பயணத்தில் ஒரு விசில் சத்தம் !! - அனன்யா பாட்டை போடு மச்சி என ப்ரியாவிடம் சொல்ல குதூகலமானது.
கொஞ்ச நேரம் எல்லாம் ஆட்டமும், கொண்டாட்டமும் குறைய ஆரம்பித்தது, அவரவர் இருக்கையில் போய் அமர்ந்தனர். அனன்யா ப்ரியாவிடம் 'கொஞ்சமா பசிக்குதுடி, அந்த Bag 'ல இருக்க snacks எடுடி சாப்பிடலாம்' என்றாள்.சிறிது நேரம் கழித்து பிரியா கீழ் படுக்கையில் படுத்துக்கொள்ள, அனன்யா தன்னுடைய மேல் படுக்கையில் படுத்துக் கொண்டு நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ் எழுதிய See Me புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாள்.
இது ஒருபுறம் இருக்க அங்கு S-2 கோச்சில் பசங்க அர்ஜுன் சார் கூட செம குதூகலத்தில் இருந்தனர். ரயில் புறப்பட்டது தான் தாமதம் அந்த கோச் முழுக்க ஒரே அலப்பறை தான். விசில் பறக்க ஆட்டமும் பாட்டமும் தூள் பறந்தது. அதில் ராஜிவ், ராம், ஜீவா இன்னும் சில அவர்களது நண்பர்களுடன் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தனர் நேரம் போவதே தெரியாமல்.
திடீரென்று அனன்யா ஒரு ரயில் நிலையத்தில் எங்கோ ஓடிக் கொண்டிருக்க, வழியில் இருக்கும் யாருடைய பெட்டியோ அவளை தடுக்கி விட, தடுமாறி விழுந்த அவளை நோக்கி முகம் தெரியாமல் இருளில் இருந்து ஒரு கரம் மட்டும் நீல அந்த கையை நோக்கி இவள் கையை நீட்ட சட்டென்று கனவிலிருந்து விழித்தாள்.படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தாள். புத்தகம் படித்துக்கொண்டே எப்போது தூங்கினோம் என யோசித்துக் கொண்டிருக்கும் போது ரயில் கோவை ஜங்ஷன் வந்திருந்தது, மணி சரியாக 4'00 A .M காட்டியது கடிகாரத்தில்.
கீழே இறங்கி முகம் கழுவி வந்து கீழே ஜன்னல் ஓரம் உட்கார, ப்ரியாவும் பக்கத்து சீட்டில் இருந்த ஸ்ரேயா 'வும் வந்து அவளுடன் சேர்ந்து கொண்டனர். என்னடி தூங்கலயா? ரெண்டு பேரும் என அனன்யா கேட்க 'இல்லடி தூக்கமே வரல, ட்ரெயின் வேற நின்றுச்சா அதான் சரி ஒரு டீ குடிக்கலாமுன்னு வந்தோம் என்றாள் ஸ்ரேயா. ஜன்னலோரமாய் டீ விற்பவனிடம் மூவரும் டீ'யை வாங்கி குடித்துக் கொண்டிருக்க, professor ஜெஸ்ஸி அங்கே வந்தார்.
என்ன இப்போவே எந்திரிச்சுடீங்களா? 'Still we have few more hours to reach the
thrissur junction, so you people get ready by 6.00 A .M and also pass this information to all our students, and one more thing எல்லாரும் ஒரே எடத்துல Assemble ஆகுங்க, தனி தனியா Split ஆயிடாதீங்க என சொல்லிவிட்டு தன் இருக்கைக்கு சென்றார் ஜெஸ்ஸி. ஸ்ரேயா அனன்யாவிடம் 'ஏண்டி காலேஜ் போற அப்பலாம் நல்லா தூக்கம் வருது, இப்போ இந்த மாதிரி I.V போற அப்போ தான் சேவல் கூவுறாப்புல இந்த ட்ரெயின் நம்மள எழுப்பி விடணுமா? என்ன கொடுமை சார் இது - சினிமா வசனம் போல கலாய்த்துக் கொண்டிருக்க ரயில் கோவை ஜுங்க்ஷனில் இருந்து கிளம்பியது.
எல்லோரும் தனது தோழிகளுடன் பேசிக்கொண்டிருக்க, அனன்யா தனது Head set'ல் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தாள்.நேரம் கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்தது. இதுவரை ரயிலில் கடந்து வந்த பாதைகளில் இருந்த டீ-கடைகளில் ஒலித்த தமிழ் பாடல்கள் எல்லாம் இப்பொது மலையாள மொழியில் கேக்க ரயில் பாலக்காடு தாண்டி பாய்ந்து கொண்டிருந்தது.
சரியாக மணி 6.45 A .M, ரயில் Thrissur ஜங்ஷனை அடைய சில நிமிடங்கள் மட்டுமே இருந்தது. எல்லோரும் தங்களது பொருட்களை எடுத்து வைத்து இறங்க தயாரானார்கள். சிலர் இன்னும் காம்பர்மென்டின் நடுவில் படுத்து உறங்கிக்கொண்டும், சிலர் தினசரி நாளிதழ் படித்துக் கொண்டும் இருக்க, கடந்து செல்லும் பாதையில் மலையாள நாட்டிற்கே உரித்தான காவி வேட்டி கட்டி செல்லும் மனிதர்கள் சிலர் தென்பட்டனர் .
திருச்சூர் ரயில் நிலையம் மணி சரியாக 7.00 A.M வண்டி எண் 11567, சென்னை- கேரளா, திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ப்ளட்போர்ம் -02'ல் இன்னும் இரண்டு நிமிடங்களில் வந்தடையும் (ട്രെയിൻ നമ്പർ 11567 ചെന്നൈ - കേരളം , തിരുവനന്തപുരം എക്സ്പ്രസ്സ് പ്ലാറ്റഫോം -02 ഇന്നും ഈരണ്ടു നിമിടങ്ങളിൽ വന്താഡൈയും )என்று ஒலி பெருக்கியில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வந்தடைந்தது. அனன்யாவும்அவளது சக தோழிகளும் நடை பாதையில் இறங்கி ஒரு இடத்தில் குழுமி நின்றனர்.
அங்கங்கே மலையாள பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்க, ரயில் நிலையத்தில் அங்கிருக்கும் போர்ட்டர்கள் 'எந்தா மோளே? luggage எடுக்கனோ? எவ்வட போகான்? என நின்று கொண்டிருந்தவர்களிடம் கேக்க, ப்ரியா அவரிடம் 'இல்ல சேட்டா, கூட்டி கொண்டு போகான் ஆள் வந்து கொண்டு இருக்கின்னு' என சொல்ல உடனே அனன்யா என்னடி மலையாளாம் எல்லாம் பேசுற எப்படி? உடனே அவள் 'எவ்வளவோ பன்றோம் இத பண்ண மாட்டோமா' என சொல்ல ஒரே சிரிப்பு சத்தம் அந்த கூட்டத்தில்.
அதற்குள் பசங்க எல்லோரும் அங்கு வந்து சேர, அவர்கள் ஏற்பாடு செய்திருந்த சுற்றுலா ஏற்பாட்டாளரும், வழிகாட்டியுமான அஜீஷ் மேனன் அங்கு சரியாக வந்து சேர்ந்தார். 'எந்தா பிரயாணம் எல்லா சுகமானோ?' என கேக்க ராம் அவரிடம் என்ன சேட்டா வந்து எறங்குன உடனே மலையாள சேனல் ஓபன் பண்றீங்களே ? என அவரை கலாய்க்க உடனே ஜீவா அவனிடம் டேய் அவரை கலாய்க்காதடா அப்புறம் இப்டியே திரும்ப புடிச்சு ஊருக்கு போடா வேண்டி தான் என சொல்ல ராம் ஓகே மச்சி அப்படியே ஆகட்டும் ட்டும் டும் என்றான் வைகை புயல் வடிவேலு குரலில்.
ஜெஸ்ஸி'யும் அர்ஜுனும் 'என்ன எல்லாரும் வந்தாச்சா? கிளம்பலாமா என கேக்க ராஜீவ் 'சார் எல்லாரும் வந்தாச்சு, போலாம் சார் என சொல்ல, அஜீஷ் மேனன் "எல்லோரும் வன்னோ? புறத்தே வண்டியிண்டு, வேகம் வரு" என அவர்களிடம் சொல்லிவிட்டு அவர் நகர எல்லோரும் ஜுங்க்ஷனின் பார்க்கிங்'ல் நின்றுக்கொண்டிருந்த வேனில் ஏறி அமர்ந்தனர். ஜெஸ்ஸி முன் இருக்கையில் அமர,அர்ஜுன் பசங்களோடு போய் கடைசி வரிசையில் சேர்ந்துகொண்டார்.
ஒரு இருபது நிமிட பயணத்திற்கு பிறகு 'Eden Valley Resort' வந்தடைந்தனர். இந்த ரிசார்ட் பிரத்யேகமாக இவர்களுக்குகென்று முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த ரிசார்ட் ஒரு அமைதியான சூழலோடு அமைந்திருந்தது. சுற்றிலும் பச்சை பசேலென்று புல்வெளியும்,ரம்மியமான சுற்றுப்புறமும்,மரங்களும் அவர்களை இனிமையான காற்றோடு வரவேற்க
அங்கு அவர்களை வெள்ளை நிற புடவையில் தங்க நிற பார்டர் கொண்ட கேரள பாரம்பரிய புடவை உடுத்திய பெண்கள் இருவர் (அழகான பெண்கள் என்று குறிப்பிடவில்லை, பெண்கள் என்றாலே அழகு தானே) சந்தானம் கொடுத்து வரவேற்றனர். ஒரு அறைக்கு மூன்று பேர் வீதம் பதினைந்து அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. ஜெஸ்ஸியும், அர்ஜுனும் அவரவர் அறைகளை ஒதுக்கி சாவியை கொடுத்துக் கொண்டிருந்தனர்.
அனன்யா ஜெஸ்ஸி'யிடம் 'மேம் Refresh ஆயிட்டு first எங்க போக போறோம், எப்போ இங்க Assemble ஆகணும் சொல்லுங்க, எல்லாரும் ரூமுக்கு போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க, சத்தம் போடாதீங்க இங்க, மொதல்ல நாம பக்கத்துல இருக்க 'குருவாயூர் கோவிலுக்கு போறோம், Then we will have our breakfast here and follow our IV agenda,right clear ? forward these instructions in our IV what's app group.
ஸ்ரேயா,அனன்யா, ப்ரியா மூவரும் தங்களுடைய அறைக்கு வந்தனர். பொத்தென்று மூவரும் கட்டிலில் விழுந்தனர். ஸ்ரேயா நீ பொய் குளிக்கிறதுனா போ, ரெடியாகு, நாங்க கொஞ்ச நேரம் குட்டி தூக்கம் போடறோம் என சொல்ல துவங்கியது தலையணை சண்டை (Pillow fight)
சரியாக மணி ஒன்பதே முக்கால், எல்லோரும் Reception அருகே எல்லோரும் குருவாயூர் கோவிலுக்கு கிளம்ப தயாராக நிற்க இணை பிரியா தோழிகள் இவர்கள் மட்டும் கடைசியாய் மாடியிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தனர்.
அஜீஷ் மேனன், எந்தா மோளே? இவளோ லேட் செய்யினு? வேகம் வரு, ஸ்ரேயா இவர் ஒருத்தர் வேகம் வரு வேகம் வரு'ங்க்ராறு பசி வேற உசுரு போகுது என்னடி பண்ணலாம் என அனன்யாவிடம் கேக்க, பொறுடி கோவில் பக்கம் தானாம் போயிட்டு வந்து ஒரு கட்டு கட்டலாம் இப்போ வா போலாம் என அவளை வேன்'னிற்கு கூட்டிக்கொண்டு நடந்தாள்.
வேனில் மலையாள பாடல் ஒன்று பாடிக் கொண்டிருக்க, ஸ்ரேயா'வும் அதனோடு கோரெஸ்ஸாக 'குட்ட நாடன் புஞ்சையிலே தித்தை' ஆட்டம் போட்டுக்கொண்டே ஏற மீண்டும் கலை கட்டியது . சிறிது நேரம் கழித்து குருவாயூர் கோவிலை அடைந்தனர். சேட்டைத் தனம் மாறி பக்திமயமாய் அனைவரும் உள்ளே நுழைந்தனர்.
வந்தவன் பார்த்த வண்ணம் நிற்க, கையில் சங்குசக்கரமும் ஏந்தி நின்ற வண்ணம் கேட்டவன் கேட்டதை வரமாய் அருளியவாங்கு நின்றிருந்தான் 'குருவாயூரப்பன்', அனைவரும் மனமுருக வேண்டி நிற்க, அனன்யா கண் மூடி திறந்த பொழுது மீண்டும் அந்த கண்களை பார்த்தாள். ஆம் அதே கண்கள்' .

கருத்துகள்
கருத்துரையிடுக