குருதிப் புனல் - அத்தியாயம் 7



ஆம் !! அவள் ரயில் நிலையத்தில் பார்த்த அதே கண்கள் தான், கோவிலின் மணி ஓசை ஒலிக்க, அனன்யா யோசனை கலைந்து  நினைவு திரும்பியவளாய் அவனை பார்த்தாள். யார் அவன் ? நாம போற இடத்துக்கெல்லாம் அவன் வர்றானா இல்லை எதேச்சையா நடக்குதா ? என தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டாள்.

எல்லாரும் கோவில் பிரகாரம் சுற்றி வர போயிருக்க, இவள் அவனிடம் பேசுவதென்று முடிவு செய்து அவன் நோக்கி நடந்தாள்.அவனும் அனன்யா தன்னை பார்த்து நடந்து வருவதை கவனித்தான்.

அனன்யா அவனிடம் மிக யதார்த்தமாக "ஹாய், உன்ன ரெண்டு தடவை பாத்திருக்கேன், ஒரு தடவை ரயில்வே ஸ்டேஷன்'ல, இன்னொரு தடவை....!!(சொல்லலாமா வேண்டாமா என்ற தயக்கத்துடன்), ஓகே , என்ன பத்தி சொல்லாம, உன்ன பத்தி கேக்காம ஏதோ ஒளறிட்டு இருக்கேன்'ல, I'm Ananyaa, doing my final year Fashion designing பண்றேன் , என்னடா இவ அவ பாட்டுக்கு வந்து பேசறான்னு நினைக்காத, நான் கொஞ்சம் Casual  type அதான்,அமைதியா இருந்த அவன் அவளிடம் "எனக்கு தெரியும், உன்ன இதுக்கு முன்னாடி  விநாயகர் சதுர்த்தி அப்போ பாத்தேன் உன்ன, உன்னோட நியாமான கோவமும், நீ போலீஸ்க்கு போன் பண்ண அப்போ நீ சட்டத்து மேல வெச்சிருக்க மரியாதையும் தெரிஞ்சுச்சு. உன்ன Follow 'லாம் பண்ணல, ரயில்வே ஸ்டேஷன்'ல திரும்பவும் பாத்தேன். அவன் சொல்ல சொல்ல அவள் யோசனைக்குள் மூழ்கினாள், அவள் யோசனையை கலைக்கும் விதமாக 'அனன்யா என்னாச்சு ?' ரொம்பவெல்லாம் யோசிக்காத, இது தான் நம்மளோட முதல் சந்திப்பு அப்படின்னு வெச்சுக்கோ !!

அப்படிலாம் ஒன்னும் இல்லை, சரி நீ உன் பெயர் கூட சொல்லல இன்னும் ! சொல்லு என்ன பண்ற நீ ? உடனே அவன் நாம இதான் முதல் தடவை பேசுறோம், அதனால நாம ஒரு நல்ல நண்பர்களா இருக்கபோறமா? இவன்கிட்ட இனிமே பேசலாமா அப்படின்னு நல்லா யோசி, அதுக்கு அப்புறம்
உனக்கு சரியா பட்டதுன்னா "I'm in Facebook, நீ என்கிட்டே பேசணும், we  can be a good friends அப்படின்னு நெனச்சா Crack this clue, you can get my name "None of the thermometer can measure my temperature, you can't see me in night, you get thirsty when you are with me for a long time. Who am i? (என்னுடைய வெப்பத்தை எந்த கருவியாலும் அளக்க முடியாது, இரவில் நான் வருவதில்லை, மிகவும் தாகமடைவாய் என்னுடன் நீ அதிகமான நேரம் இருந்தால்) நான் இங்க சென்னை'ல டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரி'ல நான்காம் ஆண்டு படிக்கிறேன். "So find me if you wish, bye for now" அப்படினு அவன் சொல்லி முடிக்கவும், எல்லோரும் பிரகாரம் சுற்றி முடித்து வந்து சேர்ந்தனர்.

அனன்யா அவனை பார்த்து சின்னதாய் ஒரு புன்னகை செய்து விட்டு தன் தோழிகளுடன் சேர்ந்து கிளம்பினாள். அவன் சொல்லியது மட்டும் ஆழமாய் பதிந்தது அவளுக்குள். எல்லா பசங்க மாதிரி இல்லாம, இவன் கொஞ்சம் வேற மாதிரி இருக்கான், இவன் நம்மக்கு ஒரு நல்ல நண்பனா இருப்பான்னு அப்பவே முடிவு செய்தாள் அனன்யா.

அவர்களை நோக்கி அஜீஷ் மேனன் நடந்து வந்து கொண்டிருந்தார்," எந்தா ? குருவாயூரப்பன் தரிசனம் கிட்டியோ? அடுத்து பட்சணம் கலிக்கானு போகான் வரூ", ஜீவா "இவரு ஒருத்தரு ஆனா ஊனா எந்தா நொந்தா'ன்னுட்டு "பசிக்குதய்யா, கொழா புட்டும், கொண்ட கடலை குருமாவையும் கண்ணுல  காட்டு ராசான்னு சொல்ல அனன்யா அவனை பார்த்து 'எப்போ பாரு கொட்டிக்குறதுலயே இரு' என்ன சொல்லி கண் சிமிட்டினாள்.

போகும் வழியில் ஒரு ஹோட்டலில் அனைவரும் சாப்பிட நுழைந்தனர், அந்த ஹோட்டலின் சுவர்களில் கேரளா பாரம்பரிய அடையாளங்களை தாங்கிய ஓவியங்களும், புகைப்படங்களும் அலங்கரித்துக் கொண்டிருந்தது. அனன்யா அதை மிகவும் ஆவலாக அதை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள். படகு போட்டி, சபரிமலை சாஸ்தா, அரண்மனை புகைப்படங்கள், இன்னும் சில. அனன்யா, ப்ரியா, ஷ்ரேயா அவர்களுக்கு தேவையானதை சொல்லி விட்டு
மொபைலை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

எதிரே இருந்த டேபிளில் இருவர் நாளிதழை படித்துக் கொண்டிருந்தனர், அதில் ஒருவர் கவலையான முகத்தோடு, நம்ம நாட்டுல பெண்களுக்கான சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சுட்டு இருக்கு, நிம்மதியா பொண்ணுங்களை வெளியே அனுப்பிட்டு வீட்ல நிம்மதியா இருக்க முடியல, காரணம் நாம ஆண்களுக்கு கொடுத்திருக்க அளவுக்கதிகமான சுதந்திரம், இப்ப கூடகோழிக்கோட்டுல நிஷா'னு (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ) ஒரு பொண்ண ஒருத்தன் கற்பழிச்சு, சொல்ல வாய் கூசுற அளவுக்கு அவளை கொடுமைப்படுத்தி அவளை கொன்றுக்கான். இவனுக்கெல்லாம் தண்டனைங்கிற பேர்ல ஜெயில்ல போடக் கூடாது, "பாக்கிற இடத்துலயே கைல கிடைக்கிறத வெச்சு அடிச்சே கொல்லனும்", என அவர் உணர்ச்சிவசப்பட்டு பேச அவரோடு அமர்ந்திருந்த நண்பரும், நாம என்ன பண்றது இப்படி தினமும் பேப்பர்'ல படிச்சுட்டு நாம வேதனை பட தான் முடியும், ஒரு சக மனிதனா இதை நாம கடந்து போகணும், அவனை தண்டிக்கிற உரிமை சட்டத்துக்கும், கோர்ட்டுக்கும் தான் இருக்கு, சமூகத்துல நடக்குற ஏதும் நம்ம வாழ்க்கையை பாதிக்க கூடாதுன்னா இப்படி தான் இருந்தாகணும் என்றார் அவர் வாழ்க்கையின் யதார்த்தம் புரிந்தவராக. (இந்த உரையாடல் மலையாள மொழியில் இருந்தது) இதை கேட்டுக்கொண்டிருந்த அனன்யாவிற்கு மனதில் எரிமலையாய் கொதித்துக் கொண்டிருந்தது. இதற்கிடையில் நாளிதழ் ஒன்றை வாங்கி தன் பையில் வைத்துக்கொண்டாள்.

அனைவரும் சாப்பிட்டு முடித்த பின்னே வண்டி அலப்பி, ஆலப்புழா கடற்கரைக்கு சென்று கொண்டிருந்ததது. அனன்யாவின் அலைபேசி ஒலித்தது, எதிர்முனையில் வசந்தி, 'எப்படி இருக்க? என்ன சாப்பிட்டாச்சா?' என்ன கேக்க, சாப்பிட்டேன் அம்மா, நீ எப்படி இருக்க? நாங்க ஆலப்புழா பீச்'க்கு போயிட்டு இருக்கோம்மா என்றாள், அதோடு ஹோட்டலில் கேட்ட அந்த
விஷயத்தையும் வசந்தியிடம் சொல்ல, அங்கே ஏதும் பிரச்னை பண்ணிக்கிட்டு இருக்காதா, சந்தோஷமா IV முடிச்சுட்டு வா சரியா? என்ன சொல்லி விட்டு போனை வைத்தாள் வசந்தி.

அனைவரும் ஆட்டமும், கொண்டாட்டமுமாய் போய்க்கொண்டிருக்க, அனன்யா மட்டும் ஜன்னலின் வழியே கடந்து செல்லும் மரங்களையும், செழிப்பான இயற்கையையும் பார்த்துக்கொண்டு வந்தாள், அவளருகே ஜெஸ்ஸி வந்து அமர்ந்து கொள்ள, என்ன நீ டான்ஸ் ஆடலையா? என அனன்யாவிடம் கேக்க இல்லை மேம்,  I like to watch nature during travel (பயணங்களின் போது எனக்கு இயற்கையை ரசிக்கப் பிடிக்கும்) என்றாள். ஓகே, Enjoy என சொல்லிவிட்டு ஜெஸ்ஸி மற்றவர்களுடன் பேசலானார்.

கடைசி இருக்கை அருகே அர்ஜுனும், ராஜீவும் குத்துப்பாட்டுக்கு ஆட்டம் போட, அனைவரும் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர். சரியாக 12.30 P.M மணிக்கு ஆலப்புழா கடற்கரையை அடைந்தனர். அவர்கள் அனைவரும் சரியாக 02.30 P.M மணிக்கு வண்டிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டனர்.  

அவரவர் தங்கள் நண்பர்களோடு குதூகலமாய் கிளம்பினர். ப்ரியாவும், ஸ்ரேயாவும் அனன்யாவோடு நடக்க ராமும் அவர்களோடு சேர்ந்துக் கொண்டான்.

அந்த மணல் பரப்பில் நடந்து கொண்டிருக்கும் போது ராம் ப்ரியாவிடம் தன் காதலை சொல்ல ரோஜா பூங்கொத்து ஒன்றை மறைத்து வைத்துக் கொண்டு நடந்து வந்தான்.

சிறிது தூரம் நடந்த பின், ப்ரியாவிடம் அந்த ரோஜா பூங்கொத்தை கொடுத்து "ப்ரியா, எனக்கு உன்னை பிடிச்சுருக்கு, இத்தனை நாளா நான் உன்கூட பழகுன அப்போ  கிடைச்ச சந்தோஷம் வாழ்க்கை பூரா இருந்தா நல்லா இருக்குமுன்னு நெனச்சேன் ", உனக்கு என்ன பத்தி என்ன ஐடியா இருக்குன்னு தெரியல ஆனா நமக்கு புடிச்ச ஒரு விஷயம் கிடைக்குதோ இல்லையோ அதுக்கான ஒரு முயற்சி கூட செய்யாம அது கிடைக்கலையேன்னு வருத்தப்பட முடியாதுல்ல அதான் உன்கிட்ட சொல்லிட்டேன், I LOVE YOU PRIYA , நீ இதை Accept பண்ணிக்கணுமுன்னு வற்புறுத்த மாட்டேன்,  உனக்கு பிடிச்சிருந்தா இதை வாங்கிக்கோ, என்ன பத்தி தெரிச்சுக்க உனக்கு இந்த கடற்கரைல கொஞ்சம் தூரம் நடந்து போயிட்டு வர நேரம் தான் தேவைப்படும், என்ன கொஞ்ச தூரம் நடக்கலாமா? என கேட்டு தன் உள்ளங்கையை நீட்டினான்.

கருத்துகள்