காதலர் தினம் - வரமொன்று தருவாயோ புன்னகை பூவே !!



இன்றென்ன வானத்து தேவதைகள் மண்ணில் உலவும் நாளோ
தவிமிருந்த ரோஜாக்கள் எல்லாம் அவள் கூந்தல் சேரும் நாளோ ?

இத்தனை நாளில் இல்லாத ஒருவித அனுபவம் இன்று மட்டும் ஏனோ?
தத்தித் தவழும் என் தமிழும் தடுமாறும் நிலையோ - காரணம் நீயோ!!

அந்த ஒரு நொடிக்காக ஒத்திகைகள் பல பார்த்து வந்தேன் - அழகாய்
சொல்ல கவிதைகள் சில மனப்பாடம் செய்து வைத்தேன்!!

ஐயகோ!! என்ன விந்தையோ உன் கண்கள் பார்த்த ஒற்றை நொடியில்
மௌனமாகி போனது என் இதழும் இதயமும் - இதில் தான் விழுந்தேனோ ?

நேற்று மட்டும் இரவின் நீளம் சீக்கிரம் முடியாதா - வேகமாய் உன் முகம் காண இந்த சந்திரனையும் களவாட துணிந்து விட்டேன்!!

மெத்தைகள் மேகமாய் மாறியது - பரவும் காற்றின் வேகத்தில் நானும்
உன் நினைவில் மூழ்கி ஓர் இரவில் ஓரராயிரம் கனவுகள் -  இந்த ஒரு நொடிக்காக !!

வானவில்லில் வண்ணம் ஏழு தான் என தெரிந்திருந்தும் புதிதாய் ஒரு
வண்ணம் தோன்றாதா என ஏங்கித் தவித்தேன் கலைந்து கிடந்த ஆடைகளை பார்த்து !


" இன்று மட்டும் என்னை சுற்றி எல்லாம் அழகாய் உன்னை போல் " 

வழி நெடுகே புன்னகை வீசும் ரோஜாக்கள் வரிசையில் நிற்க !
உனக்காக - உன் முகம் போலே அழகானதொன்றை தேடி குழப்பத்தில் நானும் நிற்க !!

உனக்கான பூ ஒன்றை நான் வாங்க - மீதம் எல்லாம் தற்கொலை செய்து கொள்ளாதோ ? - உன்னை காணாத ஏக்கத்தில்!!

புவி ஈர்ப்பு விசை இன்று மாறி போனதடி - நீ வந்ததும்
நான் மேல் நோக்கி பாய்வதும் - விஞ்ஞானம் பொய்யானதேனடி?


நில்லா கால்கள், நகரா நொடிகள் - உனக்காக காத்திருப்பதிலும் ஒரு
மெய் சுகம் - தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் துடிக்க மறக்கும் இதயம் !!

நீ உடுத்திய ஆடைகள் எல்லாம் என் நினைவில் ஊர்வலம் போக - இன்றென்ன
வண்ணம் சூடி வருவாயோ ? ஓவியமான என் நிலவே !!

என்னுள் நீ நுழைந்த கதை சொல்லவா - தினமும் என்னை காட்டும் என்
முக கண்ணாடி உன்னை காட்டிய அதிசய நிகழ்வடி அது !!

என்ன செய்தாய் என்னை ? நினைவெல்லாம் நீயே ஆனாய் - நீ
இல்லா நேரம் எல்லாம் பகலும் - இரவும் மாற்றமில்லாமல் போனதடி இருள் மூடி!!

நீ சொல்வாய் என நானும் - நான் சொல்ல மாட்டேனோ என நீயும் !
மரணம் கடந்த நிமிடங்கள் போதுமடி - நானே சொல்கிறேன் கேளாயோ ?

தாய் மடியில் தவழ்ந்து, வருடங்கள் பல கடந்து இன்று உன் முன்னே நான்!
எனக்கானவள் நீயென்று  உன்னை பார்த்து உணர்ந்த அந்த நொடியில்
நான் என்றவன் நாம் ஆக நீ என்ற உன்னை தேடி வந்தேன் - பூமியில் பிறந்த
முதல் பெண்ணின் நாகலோ நீ !!

காரணமில்லாமல் என்னுள் காவியமானவள் நீ - முதல் முதலாய் உன்னை
பார்த்த அந்த நொடிகள் நிலவொளியில் வீதியுலா செல்லும் எந்தன் தேவதை !

 காதல் ஒரு வரமென்றால் ஆயுள் முழுதும் தவமிருப்பேன் !
சாபமென்றால்!- நீ சபிக்க காத்திருப்பேன் - என் அன்பு மொத்தமும்  உனக்கென்று சாசனம் எழுதித் தருவேன் - என்றும் உன்னை மட்டும்  என் உயிர் சுற்ற அனுமதிப்பேன் !!

நாட்கள் தேவை இல்லையடி உன்னுடன் நான் வாழ! நீ என்னை பார்த்து புன்னகைக்கும் நொடிகள் போதுமடி !!

என்னோடு நீ வாழ்வது வரமென்றால் உன்னோடு நான் வாழும் நிமிடங்கள் மண்ணில் சொர்கமாகதோ!!

சொல்ல வந்த வார்த்தை மறக்கும் முன்னே சொல்லி விடுகிறேன் ! "உனக்குள் என்னை தொலைத்தேனடி" - உன்னுள் என்னை தேடித் தருவாயோ  உன்னை! இல்லை உன்னுளே  என்னை மூழ்கித் தொலைக்க விடுவாயோ!!

உன் முக கண்ணாடியில் என் முகம் காணும் நாளுக்காக காத்திருக்கும் நான்!



என்றும் அன்புடன்
-அஜய் ரிஹான்

கருத்துகள்