மழையும் - இசையும் இயற்கையும்



மழையே கவியே என்னை மயக்கும் உந்தன் துளியே !
மேகத்தை மோகமூட்டும் உந்தன் பிழையே !!

ஏழு வண்ணங்கள் கூட்டி வானவில் காட்டும் அதிசயம் நீ !
மீண்டும் ஒரு முறை என்னை குழந்தையாக்கும் மாயம் நீ  !!

உந்தன் துளியில் சிலிர்த்து போகும் பூக்களின் இதழ்கள்!
மண்ணை முத்தமிடும் உந்தன் சத்தம் அழகிய கவிதை மொழி  !!

நீ மண்ணை தொட்டதும் - என்னவள் ஞாபகம் என்னை
சுட்டதும் என்ன அதிசயமோ - அடிக்கடி வருவாயோ ?
மழையும் - அவளும் சொல்லா நினைவுகள் சொல்லில் அடங்காதே !!

ஜன்னலோரம் ஒட்டிய சரால் துளிகள் உடைத்து மகிழ்ந்து
நானும் சிறு பிள்ளையாய் மாறி போனேனே - மீண்டும் வருவாய் எப்பொழுது ?

பச்சை மீது என்ன இச்சையோ உனக்கு ? - நீ தொட்டதும் தேகம்
முழுதும் இன்பம் பரவும் என்ன விந்தையோ - அங்குமிங்கும் அசைந்தாடும் நெற்கதிர்கள் !!

தாகம் நீயோ ? - பாயும் நதியோ ? - ஆர்ப்பரிக்கும் கடலோ நீ !!
அடிக்கடி வருவாய் - இதயம் தொடுவாய் - உன்னோடு வரவா நான்?

" நீரில் தொடங்கி நீரில் கரையும் நீயும் மனிதனும் வேறில்லை "

வாராயோ நீ எம் உழவன் உயிர் காக்க - கயிற்றில் தொங்கும்
அவன் உயிரை உம் மடி சாய்த்து காப்பாயோ மழை மகளாக !!

- அஜய் ரிஹான் 

கருத்துகள்