அழகியே அரக்கியே



அழகியே !

சில்லென்ற காற்றில் சிலிர்க்கும் பேரழகு !
நித்திரை ஒழித் எறியும் நிகரில்லா நின்னழகு !!

மூர்ச்சையாக்கிப் போகும் முன்னழகு !
புராண அழகிகள் தோற்றுப் போகும் பின்னழகு !!

வெளிச்சம் காட்டிக் கொடுக்கும் வெற்றிடங்கள் பேரழகு !
வானவில் தேடும் கரும் பிறை புருவங்கள் அழகு !!

காந்த விசையில் நாற்புறம் சுற்றும் கண்ணழகு !
நில்லாது சுழலும் பூமியும் நின்று வியக்கும் காலழகு !!

சுவையூரிய மதுவோ ? தேனோ இதழழகு !
தமிழ் போல் தேக வளைவுகள் அழகு !!

கருவறை தாங்கும் இடையழகு !
தீண்டிப் போகையிலே சொர்க்கம் காட்டிப் போகும் விரலழகு !!

எதிர்பாரா தாக்குதல் செய்யும் மூச்சுக் காற்று அழகு !
பூப்பெய்திய புன்னகைகள் பூத்துக்குலுங்கும் கன்னங்கள் அழகு !!

காற்றில் கூடல் கொள்ளும் கூந்தலழகு !
இமையோரம் இச்சையாய் ஒட்டிக் கொண்ட மையழகு !!

இதழ் சுளித்து இமை மறைக்கும் வெட்கமழகு !
சிறு தவறுகள் செய்து ஒளிந்து கொள்ளும் குறும்புகள் அழகு !!

மங்கையாயினும் மழலையாய் பேசும் மொழி அழகு !
அழகை ரசிக்கும் உன் வீட்டு கண்ணாடிகள் அழகு !!

உன் நகல் போல் உறங்கும் பொம்மைகள் அழகு !
உன் நிழல் பார்த்து தேவதைகள் உயிர் பெறும் கலையழகு !!

புடவை போர்த்திக்கொள்ளும் பெண்மை(யில்) யழகு !
நெற்றியில் மிளிரும் வண்ண நிலவுகள்  பேரழகு !!

நீரோடையில் முகம் பார்த்தால் மறுநொடி
ஓவியமாகும் விந்தை அழகு !

அழகுகள் சொல்லி அலுத்துப் போனேன் அழகியே !
அழகினால் கொன்று போகும் அரக்கியே !!

இதயக்கூட்டில் இம்சைகள் தருகிறாய் நீ !
இன்பங்களையும் துலாபாரத்தில் சமன் செய்கிறாய் !!

அரக்கியே ! கவியின் முதல் வரியே ! பேரழகியே !!

- அஜய் ரிஹான் 



கருத்துகள்