புத்தகத்தை முழுவதும் புரட்டிப் பார்த்து விட்டாள் ஆனால் புகைப்படமேதும் கிடைத்தபாடில்லை. திடீரென்று ஒரு யோசனை அனன்யாவிற்கு! ரயில் துறை சார்ந்த வழக்குகளோ, அதனை சார்ந்த சட்டப்பிரிவுகளோ, அதன் கீழ் வழங்கப்பட்ட தீர்ப்புகளாகவோ ஏன் இருக்கக்கூடாது? உடனே புத்தகத்தின் முகப்பில் இதனை பற்றி தேடலானாள். ஒவ்வொரு பக்கமாய் மாற்றிக் கொண்டே வரும்பொழுது "ரயில்வே கட்டணங்களும், அபராதங்களும் பிரிவு 76 " என குறிப்பிட்டிருந்த ஒரு பக்கத்தில் அந்த பிரிவு எண் மட்டும் சிகப்பு மையால் வட்டமிடப்பட்டிருந்தது, தொடர்ந்து வந்த பக்கங்களில் இருந்த பிரிவுகளின் எண்கள் மட்டும் குறிக்கப்பட்டிருந்தது. அந்த எண்களை வரிசைப்படுத்தி எழுதி முடிக்க அது ஒரு அலைபேசியின் மொத்த இலக்கங்களை கொண்டிருந்தது.
சூர்யா சென்னை போவதற்காக பாலக்காடு ரயில் நிலையத்தில் காத்திருக்க அவனது கை பேசியில் அவளிடமிருந்து வந்த முதல் குறுந்தகவல் ஒலித்தது.
அனன்யா: ஹாய்" இது சூர்யாவா?
சூர்யா: யெஸ், இது யாரென்று தெரிந்து கொள்ளலாமா?
அனன்யா: நான் தான் அனன்யா, ஞாபகமிருக்கிறதா?
சூர்யா: நல்லாவே ஞாபகமிருக்கிறது, ஒரு வழியா அந்த புத்தகத்துல இருந்து என்னோட நம்பர கண்டுபுடிச்சுட்ட! சூப்பர்.
அனன்யா: ரொம்ப ஸ்மார்ட் தான் ()
சூர்யா: சரி, எனக்கு ட்ரெயின் வந்துருச்சு, அப்புறமா மெசேஜ் பண்றேன்.
அனன்யா மேற்கொண்டு அவனுக்கு மெசேஜ் அனுப்பலாமா வேண்டாமா என்ற குழப்பத்திலேயே உறங்கிப் போனாள். உறங்கும் முன்பு அவனது நம்பரை சூர்யா என பதிவு செய்திருந்தாள். ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேரம் கழித்து தான் கண் விழித்தாள், மொபைலில் 3 -4 குறுந்தகவல்கள் வந்திருந்தது. அதில் ஒன்று சூர்யாவிடம் இருந்து வந்திருந்தது வாட்'ஸ் ஆப்'பில்
[அதிகாலை 6 .30 மணிக்கு]
சூர்யா: "இன்னும் தூங்குறியா?"
[காலை10.00 மணிக்கு]
அனன்யா:
சூர்யா: ஓகே.,இன்னிக்கு மீட் பண்ணலாமா? ஈவினிங் ஒரு 5 .30 டி-கஃபே (D-Cafe) -ல?
அனன்யாவுக்கு குழப்பம், தெரியாத, பழக்கமில்லாத ஒரு நபரை சந்திக்க போவது சரியா? என குழம்பிக் கொண்டிருக்க, என்னடி இப்போதான் மேடம்-க்கு கோழி கூவுச்சா? காலைலயே என்ன யோசனை? என்றாள் வசந்தி காப்பிக் கோப்பையை நீட்டியவாறு.
அம்மாவிடம் சொல்லலாமா வேண்டாமா என அவளை பார்த்துக்கொண்டே, அவள் கையை பிடித்து , "அம்மா...உங்கிட்ட ஒன்னு சொல்லணும் இங்க ஒரு நிமிஷம் உட்காரேன்" என்றாள் அனன்யா.
என்ன அம்மு, என்ன சொல்லனும்?
இல்லம்மா, நான் சுற்றுலா (IV) போய் இருந்தப்போ.......ன்னு ஆரம்பிச்சு காலையில அவன் மீட் பண்ணலாமான்னு கேட்டது வரைக்கும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்.
இப்போ நான் என்ன சொல்லணுமுன்னு எதிர்பாக்குற? அவன் உன்னோட தோழனாவோ, இல்ல நல்ல காதலனவோ இருப்பானா மாட்டானான்னு சிந்திச்சு முடிவெடுக்க வேண்டியது நீ தான். அதனால நல்லா யோசி. உனக்கு சரின்னு தோணுறதை பண்ணு சிம்பிள்.
தலையை முடியை கோதிக்கொண்டே, என்னம்மா நீ..குழப்பமா இருக்குன்னு உன்கிட்ட சொன்னா நீ இன்னும் என்ன குழப்பி விட்டுட்டு போற, போம்மா என சிணுங்கினாள் அனன்யா.
சற்று நேரம் யோசித்து விட்டு தன் தோழி ப்ரியாவுக்கு போன் செய்தாள்.
[முன்பே வா என் அன்பே வா..ரிங்டோன் ஒலிக்க...]
ப்ரியா: என்னடி காலங்காத்தால கூப்பிட்டு இருக்க? என்ன விஷயம்?சூர்யாவா ?
அனன்யா: எப்படி அது நான் என்ன சொல்ல வரேன்னு கரெக்டா சொல்ற?
ப்ரியா: சரி சொல்லு, என்ன விஷயம்? கண்டு புடிச்சுட்டியா அவன் சொன்னதை?
அனன்யா: இல்லடி, அவன் கொடுத்தது ஒரு சட்டப்புத்தகம், அந்த புக்குல என்னையும், அவனையும் கனெக்ட் பண்ற ஒரே விஷயம் ட்ரெயின் தான். அது சம்மந்தமா எதாவது போட்டோ இருக்கானு பாத்தேன் கடைசில ரயில்வே law section's-ல மார்க் பண்ணி இருந்த நம்பர்ஸ் வெச்சு ஒரு மொபைல் நம்பர் கிடைச்சுச்சுடி. அது அவனோடது தான்.
ப்ரியா: சூப்பர், அவன் தான் ஸ்மார்ட்டுன்னு நெனச்சேன், ஆனா நீ செமடி.
அனன்யா: ஏண்டி நீ வேற, அவன் இன்னிக்கு மீட் பண்ணலாமான்னு கேட்டு இருக்கான் தெரியுமா?
ப்ரியா: வாவ்..!! செம பாஸ்ட் தான் சூர்யா. நீ என்ன சொன்ன?
அனன்யா: நான் அம்மாகிட்ட சொன்னேன் அவங்க என்னையே முடிவு பண்ண சொல்லி குழப்பி விட்டுட்டாங்க, அதன் உனக்கு கூப்பிட்டேன்.
ப்ரியா: சூப்பர் அம்மா...சரி, உனக்கு என்ன தோணுது? போறியா? இல்லையா?
அனன்யா: போலாமுன்னு தான் நினைக்குறேன், ஏன்னா நம்ம லைப்-ல நாம்ம மீட் பண்றவங்க யாரும் ஏதோ ஒரு கரணம் இல்லாம எதேச்சையா நடக்குறதில்ல, அதனால I just wanna know what part this character has in my life..!!
அனன்யா: சரி, அப்போ ஈவினிங் நீயும் வந்திடு நாம போலாம்.
ப்ரியா: நான் எதுக்குடி?, நீ போயிட்டு வா.போயிட்டு வந்துட்டு சொல்லு.
ஒழுங்கா வந்து சேரு, அவ்வளவு தான் சொல்லிட்டேன். ஷார்ப் 4 .30 வீட்டுக்கு வந்துடு என சொல்லிவிட்டு போனை வைத்தாள்.
மாலை 4.15, ப்ரியா வீட்டிற்குள் நுழைய, அப்பொழுது தான் குளித்து முடித்து வந்து கொண்டிருந்தாள் அம்மு. வசந்தியிடம், இங்க பாருங்கம்மா...என்னை டைமுக்கு வர சொல்லிட்டு இவ இப்போதான் குளிச்சுட்டே வர்ரா.
அப்போ நீயும் அவ கூட போறியா அவனை பாக்க?
நான் வரல, நீ மட்டும் போயிட்டுவான்னு தான் சொன்னேன், அவ தான் கேக்கவே இல்லம்மா.
அதுவும் நல்லது தான், பரவால்ல நீயும் போயிட்டு வா. சரி, என்ன குடிக்குற? காபி ? இல்லை டீ போடவா?
இல்லை, வேண்டாம்மா. coffee shop தான் போவோம்-ன்னு நெனைக்கிறேன். அங்கேயே குடிச்சுக்குறோம். இருங்க நான் போய் அவளை கிளப்பி கூட்டிகிட்டு வரேன்.
அனன்யா ரூமிற்குள் ப்ரியா நுழைய, உடை மாற்றி தயாராகிக் கொண்டிருந்தாள்.
போதும் வாடி, அவன் என்ன பொண்ணா பாக்க வர்றான்? வா கிளம்பலாம்.
இரு மஸ்காரா மட்டும் போட்டுட்டு வந்திடுறேன், நீ பாஸ்ட் ட்ராக்-ல (Fast track) புக் பண்ணு, கார் வர்றதுக்குள்ள வந்திடுறேன்.
ஒரு ரெட் வித் ப்ளாக் செக்டு ஷர்ட் போட்டிருந்தான் சூர்யா. சொன்ன நேரத்துக்கெல்லாம் அவன் அங்கு வந்திருந்தான், ஆனால் இவர்களை தான் காணவில்லை.
சூர்யாவின் கைக்கடிகாரத்தில் மணி 5 .30 காட்டும் போது இருவரும் Coffee -ஷாப்பை அடைந்திருந்தனர்.ஓரிருமுறை மட்டுமே பார்த்து இருந்தததால் உள்ளே நுழைந்ததும் அவனுக்கு போன் செய்தாள் அனன்யா.
வரிசையாய் போடப்பட்டிருந்த காபி கோப்பை வடிவிலான நாற்காலியில் அமர்ந்திருந்தான். அவர்கள் நிற்பதை பார்த்து கையை உயர்த்தி அவன் இருக்கைக்கு வரச் சொன்னான்.
இரண்டு பேரையும் வரவேற்கும் விதமாக கை குலுக்கி "ஹாய்..!! எப்படி இருக்கீங்க? ப்ளீஸ், ஹவ் யுவர் சீட்ஸ்" என்றான் நாகரீகமாய்.
முதல் சந்திப்பல்லவா..!!, என்ன பேசுவது, எப்படி ஆரம்பிப்பது என தெரியாமல் ப்ரியாவும், அனன்யாவும் அமர்ந்திருந்தனர்.
அவன் அப்படியொண்ணும் பேரழகு, கொள்ளையழகு அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, பார்த்தவுடனே வசீகரிக்கும் தோற்றமுமில்லை, நீட்டா டிரஸ் பண்ணி இருக்கான், வலது கையில ஸ்ட்ராப் வாட்ச் கட்டியிருந்தான். வயதுக்குரிய தோற்றம், சீராக ட்ரிம் செஞ்ச தாடியும், மீசையும். இப்படி அவனை பத்தின எண்ணவோட்டங்கள் இருவரின் மனதிலும் ஓடிக்கொண்டிருந்தது.
மௌனத்தை கலைக்கும் விதமாய் சூர்யா...என்ன குழப்பமா இருக்கா? என்னடா இவனை இரண்டு தடவை கூட பாக்கல, இவன் என்னடான்னா பாக்கலாமான்னு கேக்றான், புக்குல போன் நம்பர் வைக்குறான். ஓவர் ஸ்மார்ட்டுன்னு நெனைக்குறீங்களா?
அப்படியெல்லாம் இல்லை சூர்யா - இது அனன்யாவின் குரல்.
நாம மீட் பண்றது எதேர்சையா நடக்குறதில, நாம பாக்குற ஒவ்வொரு மனிதர்கள் பின்னாடியும் ஏதோ ஒரு காரணம் இருக்கும். Everything happens for a reason .
அனன்யா ப்ரியாவிடம் சொன்ன அதே காரணத்தை சூர்யாவும் சொல்ல, இருவரும் புரிதலாய் புன்னகைத்துக்கொண்டனர் அனன்யாவும், ப்ரியாவும்.
ப்ரியாவை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள், நேரம் போகப்போக அரட்டை ஆரம்பமானது. காலேஜ் பற்றியும், சுற்றுலா சென்ற பொழுது நடந்தவை பற்றியும், ராம்-ப்ரியா காதல் பற்றியும், இடைஇடையே கலாய்த்தலும், நகைச்சுவைக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது.
இதனிடையே மூவருக்கும் காபி பரிமாறப்பட்டது.
நேரம் 7 .30 ஆனது, புறப்பட தயாரான பொழுது பில் வந்தது. அனன்யா பணத்தை கொடுக்க எழுந்த பொழுது
சூர்யா: "என்னது புதுசா இருக்கு, எப்பவுமே பசங்க தானே கட்டுவாங்க. "?
அனன்யா: நாங்க கொஞ்சம் வேற மாதிரி
சூர்யாவையும் அனன்யா வீட்டிற்கு அழைக்க, மூவரும் வீட்டிற்கு கிளம்பினர்.
வசந்தி சூர்யாவை "வாப்பா, எப்படி இருக்க?" என தன் சொந்த பந்தங்களை விசாரிப்பது போல யதார்த்தமாய் பழகினாள்.
உள்ளே ஹாலில், சூர்யாவும், வசந்தியும் பேசிக்கொண்டிருக்க, சமையலறையில் அனன்யாவும், ப்ரியாவும் தங்களுக்கு தெரிந்தவாறு டீ போட்டுக்கொண்டிருந்தனர்.
அது எப்படி ஆண்ட்டி? நீங்களும் சரி, அனன்யாவும் சரி சீக்கிரம் ஒருத்தரை புரிஞ்சுக்குறீங்க? எனக்கு ஆச்சர்யமா இருக்கு.
இதுல என்ன இருக்கு? என்னோட பொண்ணு யாரையும் அவ்வளவு சீக்கிரமா யாரையும் தோழனா ஏத்துக்க மாட்டா, இப்போ அவ ஒருத்தரை வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கான்னா அவ சரியான ஒரு நபரை தானே செலக்ட் பண்ணி இருப்பா? அப்படி இருக்க அப்போ அவங்க எப்படி தப்பானவங்களா இருக்க முடியும்? அதான் நானும் உங்களை அப்படியே ஏத்துக்கிட்டேன் சிம்பிள்.
இப்படியொரு பதிலை கேட்டு தன் மீது அனன்யாவும், அவளது அம்மாவும் வைத்திருந்த நம்பிக்கையை பார்த்து வியந்தான்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே தோழிகள் இருவரும் இவர்களுக்கு டீ எடுத்துக்கொண்டு கொடுத்தனர். சிறிது நேரம் சூர்யாவின் குடும்பம் பற்றியும், அவனது பெற்றோர்கள் விட்டுச் சென்றது வரை பேசிக்கொண்டிருக்க, திவ்யாவை பற்றி மட்டும் அவன் அவர்களிடத்தில் எதுவுமே சொல்லவில்லை.
கிளம்பத் தயாரான சூர்யா, அனன்யாவிடம் ஒரு பரிசையும், ப்ரியாவிடம் ஒரு டைரி மில்க் சாக்லேட்டையும் கொடுத்துவிட்டு, ப்ரியாவிடம் "சாக்லேட் ஒன்னு தான் வாங்கினேன், சோ ஷேர் இட் வித் அனன்யா டூ" என சொல்லிவிட்டு, வசந்தியிடமும் கூறிக்கொண்டு கிளம்பினான்.
சிறிது நேரம் கழித்து, அனன்யா அந்த பரிசை திறக்க அதில் இருந்தது ஒரு "PARKER PEN".
சிந்திப்போம் அடுத்த அத்தியாயத்தில் மரண காட்சிகளோடு!
கருத்துகள்
கருத்துரையிடுக