குருதிப் புனல் - அத்தியாயம் 17




அது ஒண்ணுமில்லம்மா, நீ வா உள்ள போய் பேசிக்கலாம் என உள்ளே அழைத்துக்கொண்டு போனாள்.

மணி சரியாக 6.45, வீட்டில் உறவினர்கள் அனைவரும் வந்து சேர்ந்திருந்தனர். நிச்சயதார்த்த தொடக்க பூஜைகள் எல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, ப்ரியாவிற்கு அலங்காரம் இன்னொருபுறம் நடந்து கொண்டிருந்தது.

வீட்டில் ஆங்காங்கே உறவினர்கள் கூடி தங்கள் ஆடைகள் பற்றியும், குடும்ப பிரச்சனைகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர். ராமின் நண்பர்களும் வந்திருந்தனர், குதூகலத்திற்கும், கேலி கொண்டாட்டத்திற்கும் குறை இல்லாமல் இருந்தது.

சூர்யா ராமின் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்க, அனன்யா உடையை மாற்றிக்கொண்டு வந்திருந்தாள். வசந்தி அவளிடம் அதைப்பற்றி மேற்கொண்டு அப்பொழுது எதுவும் கேக்க வேண்டாம் என முடிவெடுத்திருந்தாள்.

ஆனால் அங்கு சூழ்நிலையே வேறு விதமாக இருந்தது, சம்பவ இடத்தில் போலீஸ் அதிகாரிகள் வருண் கிடந்த இடத்தில் சோதனை மேற்கொண்டனர். அங்கே கிடந்த அவனது மொபைல் போனை போலீசார் கைப்பற்றி அதில் கடைசியாக அவன் பேசிய தகவல்களையும் இதர விவரங்களையும் சேகரித்துக்கொண்டிருந்தனர்.

அவன் சாய்ந்து கிடந்த இடத்தின் அருகே இருந்த மரத்தில் உறைந்த நிலையில் சிறிது அளவு ரத்தம் ஒட்டிக்கொண்டிருந்தது. அதனை பரிசோதனைக்காக சாம்பிள் எடுத்துக் கொண்டனர்.

பாரம்பரிய செண்டை மேள தாள வாத்தியங்களுடன் நிச்சயதார்த்தம் தொடங்கியது.  அருகில் இருந்த விநாயகர் கோவிலில் பூஜைகளை முடித்து விட்டு இரு வீட்டாரும் வீட்டிற்கு வந்து சேர கையில் ஆரத்தி தட்டோடு அனன்யா நின்றாள்.

எந்தா மோளே, ஆரத்தி எடுக்கின பழக்கம் இவ்வித இல்லை கேட்டோ? என்றார் அந்த கூட்டத்தில் வயதான பாட்டி ஒருவர். அனன்யா அவரிடம் எங்க தமிழ் பொண்ணு மட்டும் வேணும் ஆனா எங்க தமிழ் பண்பாடு வேண்டாமோ? என்றாள். அந்த பாட்டியிடம் இருந்து பதிலே இல்லை. பின்னாடி நின்றிருந்த ராமின் நண்பர்கள் ஒருமித்த குரலில் "தமிழன்டா எந்நாளும், சொன்னாலே திமிர் ஏறும்" என பாட, அந்த இடமே கலகலப்பானது.

சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து மோதிரம் மாற்றிக்கொள்ளும் நிகழ்ச்சி அரங்கேற தயாரானது. பிரியாவுடன் அமர்ந்திருந்த அனன்யா அவள் காதில் ஏதோ முணுமுக்க, ப்ரியா ராம்-ஐ  பார்த்து பரிகாசமாய் சிரித்தாள்.

இரு மனம் ஒன்றென சேர்ந்ததன் சாட்சியாய் இதயம் இரண்டும் இடமாற 'அவள்' பெயர் பதித்த மோதிரம் அவன் விரலிலும், 'அவன்'  பெயர் அவளிடமும் சேர, நிச்சயமானது ராம்-ப்ரியா கல்யாணம்.

இதர முறைகள் நடந்து கொண்டிருக்க, டின்னர் முதல் பந்தி ஆரம்பித்திருந்தது. அனன்யா சூர்யாவை கூட்டிக்கொண்டு மொட்டை மாடிக்கு சென்றாள்.

காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை தயாராகி இருந்தது. அரசியல் பின்னணி கொண்ட விஷயம் என்பதால் தகவல்கள் எதுவும் ஊடகங்களில் வெளியாகவில்லை. ஆண்டனி மோசஸ் பாலக்காடு தலைமை மருத்துவரிடம், இவர்களை பற்றிய தகவல் எதுவும் வெளியே போகக்கூடாது எனவும், இவர்களின் பிரேத பரிசோதனை தகவல் அறிக்கை நாள் காலைக்குள் வேண்டும் எனவும் சொல்லி இருந்தார்.

சூர்யா, இப்போ என்ன பண்ணலாம் சொல்லு. நான் அப்போவே போலீஸ் ஸ்டேஷன் போய்  இன்போர்ம் பண்ணிடலாம்ன்னு சொன்னேன், நீ தான் பாத்துக்கலாம்ன்னு சொல்லிட்டே.

சும்மா புரியாம பேசாதே அம்மு, நீ அவனை தற்காப்புக்காக தாக்கின அவ்ளோ தான். அவன் அதுல அங்க மயங்கி விழுந்து இருக்கான், அந்த பேனாவுல குத்தினதுல அவனோட  குரல்வளை பக்கத்துல ஓட்டை ஏற்பட்டு ரத்தம் வந்திருக்கு, மரத்துல அவன் மோதினான்னு சொன்னல, அப்போ கண்டிப்பா அவனோட பின் மண்டைல அடி பட்டிருக்கும்.

அதான் போலீஸ் அவங்க ரிப்போர்ட் ரெடி பண்ணட்டும் நாம நாளைக்கு காலைல போய் ஆண்டனி சார்-ஐ பாக்கலாம், அப்போ தான் தெளிவான ஒரு முடிவு தெரியும்.அப்படியே நீ போய் இதெல்லாம் சொன்னாலும், அவங்களால உன் மேல இந்திய தண்டனை சட்டம் 1860 - படி தற்காப்புக்காக தாக்கினதா தான் வழக்கு பதிய முடியும். அதனால இப்போ கொஞ்சம் நிம்மதியா இரு என தெளிவாய் சொல்லி முடித்தான்.

சூர்யா சொன்னதை கேட்டு கொஞ்சம் நிம்மதியானாள். அப்பொழுது அங்கே வந்த வசந்தி 'இங்க இருக்கியா நீ? காணோமேன்னு தேடிகிட்டு இருந்தேன்', உன்கிட்ட நானே பேசணுமுன்னு இருந்தேன். ஏதாச்சு பிரச்சனையா? என கேக்க, அனன்யா ஏதோ சொல்ல முற்பட சூர்யா வசந்தியிடம் 'பயப்படற மாதிரி ஒன்னும் இல்லை ஆண்ட்டி, அம்மு பஸ் ஸ்டாப்ல என்ன கூட்டிட்டு வரதுக்கு வெயிட் பண்ணிட்டு இருந்த அப்போ...! என விஷயத்தை சொல்ல முற்பட்டவனை அனன்யா 'சூர்யா வேண்டாமே....'

ல்லை அனன்யா, அம்மாகிட்ட மறைக்க கூடாது, அப்புறம் நாளைக்கு ஏத்து பிரச்சனைன்னா அவங்க பயந்துடுவாங்க, அதுனால இப்போவே சொல்லிடறது நல்லது தான்.அதுக்கு மேல சூர்யாவை அம்மு தடுக்கவில்லை.

நிதானமாய் அவள் காத்திருந்தது முதல் அந்த பேனாவால் அவனை தாக்கியது வரை சொல்லி முடித்தான். இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த வசந்தி, சிறிது நேரம் என்ன சொல்வதென்றே தெரியாமல் அமைதியானாள்.

அம்மா நீ எதுவும் வருத்தப்படாத, ஒரு விஷயம் தப்புனு தெரிஞ்ச அப்புறம் எனக்கென்னன்னு போக முடியலம்மா. கவலை படாதீங்க ஆண்ட்டி பாத்துக்கலாம், நீங்க பயப்படுற அளவுக்கு ஒன்னும் நடக்காது, சட்ட ரீதியா என்ன பண்ணணுனாலும் நான் இருக்கேன் கூடவே, அதுனால தைரியமா இருங்க என்றான் சூர்யா உரிமையாய்.

ப்ரியாவும் - ராமும் இவர்களை தேடி அங்கேயே வந்துவிட்டனர் . இங்க என்னடி பண்ணிட்டு இருக்கீங்க? சாப்பிடலாம்னு பாத்தா உங்கள காணோம். அதான் தேடிகிட்டு வந்துட்டோம், சரி வாங்கம்மா சாப்பிட போலாம், நீயும் வாடி என ப்ரியா வசந்தியை கூட்டிக்கொண்டு முன்னே நடக்க, சூர்யாவும், அம்முவும் பின் தொடர்ந்தனர்.

மறுநாள் காலை, சூர்யாவும், அனன்யாவும் பாலக்காடு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் மோசஸ்-ஐ பார்ப்பதென்று முடிவெடுத்திருந்தனர்.

காலை 10.00 மோசஸ் டேபிளில் பிரேத பரிசோதனை அறிக்கை பேப்பர்கள் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது.

ஸ்டேஷனில் நுழைந்ததும் காவலர் டைப்பிஸ்ட்  நாயரிடம் அந்த ரிப்போர்ட் வந்ததா இல்லையா என்று தான் முதலில் விசாரித்தார் இன்ஸ்பெக்டர்.

சாயிந்திரம் சென்னை போவதற்கு ட்ரெயின் டிக்கெட் புக்கிங் பண்ணியிருந்தாள் அனன்யா. இங்கு என்ன நிலைமை என்னவென்று பார்த்துக்கொண்டு அப்புறம் கிளம்பலாம்  என வசந்தியிடம் முன்னமே சொல்லி வைத்திருந்தாள். இந்த விஷயம் பற்றி விஷேஷ வீட்டில் யாரிடமும் சொல்லி கொள்ளவில்லை, ப்ரியாவிடம் கூடத்தான்.

மறுநாள் காலை ப்ரியாவிடமும், ராமிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட, சூர்யா அம்முவிடம் 'போலீஸ் ஸ்டேஷன்ல உண்மையை சொன்ன அப்புறம் நிலவரம் எப்படி இருக்கும்ன்னு தெரியலை' அதனால அம்மாவை நம்ம வீட்டுக்கு அனுப்பிடலாம் என்றான்.

அம்முவிற்கும் அதுதான் சரியென பட்டது. ஒரு ஆட்டோவில் வசந்தியை வீட்டிற்கு அனுப்பிவிட்டு இவர்கள் இருவரும் போலீஸ் ஸ்டேஷன் கிளம்ப தயாராகினர். 

சட்டம் தன் கடைமையை செய்யும்.


கருத்துகள்