கருவறை தாண்டி வீதியுலா போகும் இறைவிகள்
கனவுகள் ஆயிரம் கண்களில் சுமக்கும் பிறவிகள்
கரைகளில்லா வெள்ளம் போலே பொங்கி வரும்
கருணை - நேரங்களில் சூளுரைக்கும் கோலம் கொள்ளும்
பெண்மை
நாகரீக வளர்ச்சியிலும் நானிலம் போற்றும் பல
நங்கையர் உலவக் காண்கிறேன் சக்கரமாய் சுழலும்
சமூக வளர்ச்சியில் ஓங்கி ஒலிக்கும் சாதனை
சப்தங்களில் உன் கரங்கள் வானுயர நிற்க
காண்கிறேன்
ஆழ்கடல் அதிசயங்கள் பல கண்டவருண்டு நின்
ஆழ்மனம் ரகசியங்கள் தேடிச் சென்றவர் எல்லாம்
அடி முடி காணச் சென்றவர் கதையே
அரிதான புதையலும் நீயே விடையில்லா மர்மமும்
நீயே
மாதொருபாகமாய் நின்று சமம் உரைத்த சக்தியும்
மாசில்லா சுடரென்று நகர் எரித்த கண்ணகியும்
அன்பிற்கு ஓர் வடிவென உயிர் கொண்டெழுந்த
அன்னை தெரஸாவும் வரையறை செய்த பெண்ணின
இலக்கணம்
வியக்கிறேன் கொதிக்கும் வெந் தனாலோ? பொழியும்
மாமழையோ? துளியில் தொடங்கி நதியில் முடியும்
வாழ்வின் வெற்றிடத்தை புன்னகையில் நிரப்பி விடும்
பூமகளே - பெண்ணியம் காக்கும் காவல் செய்வோம்
காவலனாய்
"மகளிர் தின வாழ்த்துக்கள்"
- அஜய் ரிஹான்
கருத்துகள்
கருத்துரையிடுக