கள்ளமில்லா நெஞ்சில் கள்ளூற்றி வளர்ந்த வினை
கரைக்கும் விஷமென அறியா பருவம்
புரிதல் வேளையிலே புகலிடமென புகுந்து விட்டாய்
பிரிந்துணை பிரிக்கும் பொழுதிலே வெந்-
தனலென தேகம் தவிப்பது ஏனோ? பலர்
தன்னை மறந்தும் உன்னை சரண்-
அடைந்து கிடப்பது நியாயமோ ? முரண்
அடைக்க காண்கிறேன் நின் ஆட்கொள்ளல் முறையில்
சுரக்கும் அமுதும் உலகு கண்ட வழியும்
தூய்மையே - கலப்படமாய் நீ புகும்
முறையே பல வன்மம் ஊட்ட மனிதனுள்
உறங்கும் மிருகம் விழிக்க காரணம்
பார்வையெல்லாம் நாகரேகை போலே அங்கம்
மேய்ச்செய்யும் அறியாமை விஷம் நீ
வயதில் ஒட்டாத ஒழுக்கம் வீதியெல்லாம்
உத்திரம் சிந்தும் : ஆயுதம் ஏந்தியும்,
தாமே ஆயுதமென பிறர் உயிரினும் மேலான
ஜீவனை அழித்தும் முழு அரக்கனாய்
உலாவும்.!
நீதி செய்வோர் யார்?
நீதி கேட்போர் யார்?
நீயோ நானோ ஊமை!
ஆயன் அவனோ அடிமை!
ஆள்பவனும் மீள்பவனும் யாரோ?
புகுதல் பொழுதிலே புரிதல் கொள்வோம்!
ஒழுக்கம் சீரானால் கருவும் சீராகும்!
யாரோ புகுதல்: கேள்வியும் நீ, விடையும் நீ!
- அஜய் ரிஹான்
கருத்துகள்
கருத்துரையிடுக