பெண்ணியம் பேசும் சாக்கடை கால் 'வாய்'கள் நாம்
கடவுளின் படைத்தலில் மாபெரும் பிழை வழித் தோன்றல் நாம்
ஒரு சில விதிவிலக்கும் உண்டு!
மிருகத்தை மனித தோல் உடுத்தி உலவ விட்டானோ?
இச்சை கொண்டு திரியும் பிண்டங்கள் எல்லாம்
பாவ சுமைகள் தான் இப்பூமிக்கு
இவர்களை எல்லாம் புசித்து விழுங்க மாட்டாயோ?
படைத்தலில் பங்கில்லையென்றால் நம் இனத்திற்கோர்
அவசியமில்லை இங்கு
பிரபஞ்சம் ஒரே சக்தியென நிரம்பி வழியட்டும்!
எல்லாம் உண்டு களித்த மமதையில் நம்மை
உண்ணத் தவமிருந்த பாம்பையும் விழுங்கிய
ஆலகால நஞ்சின் மனித உருவம் ஆண்
விஷம் நாம்? பாம்பு?
வன்கொடுமை செய்யும் எவ்வுறுப்பாயினும் செய்யத்
துணிந்த மாத்திரமே வெந்தனலில்
எரியக் கடவது - இப்படியொர் சாப பிடியில்
படைத்திருக்கலாம் 'ஆண்'களை
போலியாய் வேடமிட்டு திரியும் நாக்குகளை
மறு யோசனையின்றி வெட்டி எறிந்து விடு
பெண்ணியம் பேசிப் புரிவது அல்ல;
புரிந்து/உணர்ந்து பேசுவது!
இனியேனும் மனிதனாக முயற்சிப்போம் ஆண் இனமே!
- அஜய் ரிஹான்
கருத்துகள்
கருத்துரையிடுக