சுற்றுலா கனவுகள் சிறகடிக்கத் துவங்கி இருந்தது அனன்யாவிற்கு!!
இதற்க்கிடையில் விநாயகர் சதுர்த்தி வேறு நெருங்கிக் கொண்டிருக்க, வசந்தியிடம் 'ஏம்மா, நாம இந்த பண்டிகையை கொண்டாட போறோமா ?, அப்பா இறந்து மூணு மாசம் கூட ஆகல, அதுக்குள்ளே எப்படிமா ?' என கேக்க அம்மு அதெல்லாம் ஒன்னும் இல்லடி, சாமிய கும்பிடறதுக்கு இதெல்லாம் ஒரு தடை இல்ல, நாம கோவிலுக்கு தான் போக கூடாது, ஆனா இங்க கடவுளே நம்ம இருக்க வீதி வழியா போற அப்போ நாம கும்பிடறதுக்கு என்ன சொல்லு? அதனால நாம விநாயகர் சதுர்த்தி கொண்டாடத் தான் போறோம் என்றாள் வசந்தி மிகத் தெளிவாய் !
வீதி எங்கும் விழாக் கோலம் கொள்ள, ஒலிப் பெருக்கிகள் 'விநாயகனே வினை தீர்ப்பவனே! வேழ முகத்தோனே ஞால முதல்வனே' என பாடிக் கொண்டிருக்க, வீதியின் இறுதியில் மங்கள கணபதி கோவிலின் அருகே கம்பீரமாய் வீற்றிருந்தார் விநாயகர் சதுர்த்திக்காக செய்யப்பட்ட பிரமாண்டமான கண-நாயகன்!!
தெருவில் ஏதோ சலசலப்பு, சத்தம் கேட்டு வெளியே எட்டிப் பார்த்தள் அனன்யா. தெருவில் குடி-மகன்கள் காலையிலேயே குடித்து விட்டு வழக்கம் போல தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருக்க, அங்கு விநாயகர் சிலைக்கு காவலுக்கு நின்ற காவலாளியும் அமைதியாய் சிலை போல நிற்க, மக்கள் கூட்டம் கூடியது. வீட்டிற்குள் கடிகாரத்தை பார்த்தள் மணி சரியாக ஒன்பதை காட்டியது!!
அனன்யா சட்டென்று அங்கிருந்த போலீஸ்காரரிடம் ' சார், அங்க ஒருத்தன் குடிச்சுட்டு பிரச்சனை பண்ணிட்டு இருக்கான், நீங்க இங்க இங்க விநாயகர் சிலையோடு சிலையா நீக்கீறீங்க?, அங்க வந்து அதை சரி பன்னலமுல்ல' என சொல்லி முடிக்கும் முன்னரே அந்த போலீஸ்காரர் 'என்னமா உன் வாய்க்கு வந்தபடி பேசுற, ஏதாவது பிரச்சனை அப்படினா போயி ஸ்டேஷன்'ல புகார் பண்ணு, அத விட்டுட்டு இங்க கத்திக்கிட்டு இருக்காத போம்மா வேலைய பாத்துகிட்டு என பொரிந்து தள்ளினார்.
உடனே அனன்யா அங்கிருந்த கூட்டத்திற்கு மத்தியில் தகராறில் ஈடுபட்டிருந்த இருபது வயது தக்க பையன் நிதானமில்லாமல் போதையில் ஆடிக் கொண்டிருந்தான், அனன்யா அங்கு நின்று கொண்டிருந்த தனது எதிர் வீட்டுக்கார் மூர்த்தியிடம் 'அங்கிள், அவன் மேல ஒரு குடம் தண்ணிய ஊத்தி, ஓரமா உட்கார வைங்க, போலீஸ்ல சொல்லிடலாம், அதற்க்கு அவரோ 'ஏம்மா நமக்கு எதுக்கும்மா தேவை இல்லாத வேலை, போலீஸ்'ல எல்லாம் சொல்ல வேண்டாம்மா, அவனா போதை தெளிஞ்சா போயிடுவான், வீட்டுக்கு போம்மா' என சொன்னார்.
யாரும் சற்றும் யோசிக்காத போது அனன்யா அவனது கன்னத்தில் 'பளார்' என ஒரு அறை விட்டாள், நிதானம் இழந்த அவன் ரோட்டில் விழ, தனது கைபேசியில் '100' தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தாள். பக்கத்து வீட்டின் வாசலில் இருந்த ஒரு குடம் தண்ணீரை அவன் மீது ஊற்றினாள்.
நமக்கென்னன்னு நீங்கலாம் இருக்க வரைக்கும், இந்த மாதிரி கேவலங்களை எல்லாம் நம்ம தெருவுல பார்க்கத்தான் வேணும், போங்க போயி உங்க வீட்டுல இருக்க உங்க பசங்களையாவது இந்த மாதிரி இல்லாம பாத்துக்கோங்க, அப்புறம் நாளைக்கி இப்படி கெடந்தா நம்மக்கென்னன்னு தான் மத்தவங்களுக்கும் போவாங்க, போயி வேலைய பாருங்க என சொல்லி முடிப்பதற்க்குள் அங்கு வந்து சேர்ந்தார் அண்ணா நகர் இன்ஸ்பெக்டர் முத்து வடிவேல்.
என்னமா இங்க பிரச்சனை? யார் எனக்கு போன் பண்ணது ? -"நான் தான் சார்", முன் வந்து நின்றாள் அனன்யா. சொல்லும்மா என்ன நடந்துச்சு?, சார்,இங்க விநாயகர் சதுர்த்தி விழா நடக்குது, நியாயப்படி பார்த்தா மதுக்கடைகள் எல்லாம் இன்னிக்கு திறந்து இருக்கவே கூடாது, இடையே குறுக்கிட்ட இன்ஸ்பெக்டர் 'இவன யாரு அடிச்சது? அத சொல்லுங்க மொதல்ல என கேக்க சுற்றி நின்ற யாரும் வாய் திறக்காது மௌனம் காக்க, 'நான் தான் சார்' என்றாள் மீண்டும்! இந்த கூச்சல்களுக்கு இடையே வசந்தியும் அங்கு வந்து சேர்ந்தாள்.
என்னடி பண்ற இங்க? தெருவே வேடிக்கை பாக்குது! என்றாள் வசந்தி, ஆமா அம்மா இவங்கல்லாம் வேடிக்கை மட்டும் தான் பாப்பாங்க, ஒரு பிரச்சனைன்னா வாயே திறக்க மாட்டாங்க பாவம், ஒருத்தன் மதுக்கடையை அரசாங்கம் சொன்ன நேரத்துக்கு முன்னாடி திறக்கிறான் அத கேக்க இங்க ஆள் இல்ல ஆனா ஒருத்தன் குடிச்சுட்டு பிரச்சனை பண்றான் அவனை தட்டி கேட்டதுக்கு முன்னாடி வந்து நிக்கிறார் போலீஸ்காரர் என்ன தான் நடக்குதோ போம்மா என்றாள் அனன்யா.
இவளோ பேசுறியே 'நீ என்ன அதிகாரத்துல இவன அடிச்ச, அவன் உன் மேலே புகார் குடுத்தா என்னம்மா பண்ணுவ' என்றார் முத்து வடிவேல், ஆமா சார் இந்த வயசுல குடிச்சுட்டு திரியுரான் தட்டி கேக்க வேண்டியது நீங்க, நீங்க கேக்காம இப்படி மக்களுக்கு துணையா இல்லாம இப்படி யார் யாருக்கோ சப்போர்ட்டா இருக்கீங்க, நீங்க நடவடிக்கை எடுக்கலானா நான் யார்கிட்ட புகார் பண்ணணுமோ பண்ணிக்கிறேன் சார் என்றாள்.
என்னம்மா உன்னோட தொல்லையா போச்சு, "யோவ் ஏட்டு அந்த பையன வண்டில ஏத்துயா, பாதி மயக்கம் தெளிந்த அவன் அந்த ஜீப்பில் ஏற, இந்தா பாரும்மா சும்மா இந்தா மாதிரி விஷயத்துக்கெல்லாம் போலீசை கூப்பிடாதம்மான்னு சொல்லிட்டு எரிச்சலுடன் கிளம்பினார் முத்து வடிவேல்,
போற வழியில் அந்த பையனை கண்டித்து அனுப்பி வைத்தார்.
கூட்டம் கலைய, அதில் ஒருத்தர் என்னயா இந்த பொண்ணு எடுத்ததுக்கெல்லாம் கோவப்படுது, பாவம்யா அவுங்க அம்மா எப்படி தான் சமாளிக்குதுன்னே தெரிலன்னு சொல்ல, இதை காதில் கேட்ட வசந்தி 'உங்கள மாதிரி ஆளுங்கள சமளிக்குறது தான் கஷ்டம், அவ என் பொண்ணு, எனக்கு தெரியும் அவளை பத்தி போங்க என்றாள் கோவமாய். அதில் ஒருத்தி சொன்னாள் 'மித்ரனின் பொண்ணுல்ல அப்படி தான் இருக்கும், அவரோட குணத்துல கொஞ்சமாது இருக்குமுல' - இதை கேட்ட வசந்தி பெருமிதம் கொண்டாள்.
இதையெல்லாம் தெருவில் இருந்த அந்த காவலாளியும், விநாயகரும் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள்.
மறுநாள், விநாயகர் சதுர்த்தி - வீட்டில் கொழுக்கட்டையும், லட்டும் தயாராகிக் கொண்டிருந்தது. அதிகாலை முதலே அண்ணா - நகர் தெரு முழுவதும் பண்டிகை கோலம் கொண்டது. தெருவெங்கும் ஒலிப் பெருக்கிகள்
பாடல்களை பரவ விட்டுக்கொண்டிருக்க, ஆனந்த தாளம் போட்டுக்கொண்டு காத்திருந்தார் விழா நாயகன் - கண - நாதன் !!
தட்டில் தேங்காய், பழம், மாலை, வெற்றிலை பாக்கு, ஊதுபத்தி சகிதமாய் பூஜை தட்டை தயார் செய்தாள் அனன்யா, வசந்தியோ கொழுக்கட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு இலை மூடி வைத்தாள் .
தெரு மக்கள் அனைவரும் மங்கள கணபதி கோவிலின் அருகே ஒன்று கூடி நிற்க, வசந்தியும், அனன்யாவும் பூஜை தட்டும், பிரசாதங்களோடும் வந்து சேர்ந்தனர்.
மிகச் சரியாக பூஜை நேரத்திற்கு கோவிலுக்கு வந்து சேர்ந்தார் கோவில் அர்ச்சகர் 'சிவஞானம்', என்ன, எல்லாரும் வந்துட்டேலா? நேக்கு சித்த நாழி ஆயிடுத்து, கணபதி ஹோமம் முடிச்சுட்டு நேரா இங்க தான் வரேன், பூஜைய ஆரம்பிச்சுடலாமா என்றார்.
கர்பகிரஹத்தில் மங்கள கணபதிக்கு அபிஷேகம், அலங்காரங்கள் முடிந்து அர்ச்சகர் நெய்வேத்தியதை வாங்க வந்த பொழுது , கோவிலில் நின்ற பெண்களில் ஒருத்தி 'என்ன ஐயரே அவங்க வீட்ல இப்பதான் அவங்க வீட்டுக்காரர் தவறினார், அவங்க வீட்டு பிரசாதத்தை சாமிக்கு படைக்கலாமா?' இதைக் கேட்ட வசந்தியின் முகம் சோகமானது. அர்ச்சகர் 'என்னம்மா நீங்களே இப்படி சொல்றேளே!! பகவானுக்கு பிரசாதம் படைக்குறது பெரிய விஷயம், அவாளே இப்போ தான் தேறிண்டு வரார், இப்படி அவா மனசு புண் படும்படியா பேசாதேள்! நல்ல மனசோடு ஸ்வாமிக்கு பிரசாதம் பண்ணிண்டு வரவாள இப்படி பேசாதீங்கோம்மா!! இதை கேட்ட அந்த பெண்மணி வாய் அடைத்து நின்றாள்.
பிரம்மாண்ட விநாயகருக்கு 'கண்-திறந்து' பூஜைகள் பல செய்வித்து, அர்ச்சகர் 'ஜெய் மங்கள கணபதி' என சொல்ல மக்கள் எல்லாம் மங்கள கோஷங்கள் எழுப்ப ஆனந்தத்தில் வயிறு புடைக்க நெய்வேத்தியங்களை ஆவாஹனம் செய்தார்.
அன்று இரவு, கல்லறை தோட்டத்தில் அன்று நடந்த செய்திகளை கேள்விப்பட்டு மித்ரனின் ஆவி தன் உதிரத்தின் விதை உயிர்த்தெழுந்து நிற்பதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தது. ஆனால் அனன்யாவிற்குள் அந்த போலீஸ்காரர் கேட்ட கேள்வி மட்டும் ஓடிக்கொண்டிருந்தது 'நீ என்ன அதிகாரத்துல இவன அடிச்ச, அவன் உன் மேலே புகார் குடுத்தா என்னம்மா பண்ணுவ'
மறுநாள், அம்மா என்னோட அந்த பிங்க் கலர் சுடிதார் எங்க வெச்ச? நாளைக்கு நாங்க கேரளா போரோம்ன்னு தெரியும்முல்ல, வா வந்து எடுத்து குடும்மா என கத்திக்கொண்டிருந்தாள் அனன்யா, ஆரம்பிச்சுட்டாளா, ஒன்னு எவனாவது தப்பு பண்ணி இவ கிட்ட மாட்டிக்குறான், இல்லை இப்படி வீட்டுக்குள்ள கத்தி என்ன கொல்லுறா, மொதல்ல இவளை கேரளாவுக்கு கெளப்பிவிடனும், இதோ வரேன்டி!!!!

-நாமும் சொல்வோம் 'ஜெய் மங்கள கணபதி '
கருத்துகள்
கருத்துரையிடுக